Wednesday, June 1, 2016

7- புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்

திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்ட இக்கோயில் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது.

இக்கோயில், வல்வில்ராமன் - பொற்றாமரையாள் ஆகிய கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர்.தாயார் ஹேமாம்புஜவல்லி எனப்படும் பொற்றாமரையாள், திருக்குளத்து தாமரைப் பூவிலிருந்து தோன்றியதால் இப்பெயர்.

இறைவன், வேறு எங்கும் காணமுடியாத நாங்கு திருக்கரங்களுடன் சங்கு ,சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ஸ்ரீராமன் காட்சியளிக்கிறார்.

இராமாயணக் காலத்தில் ஜடாயூ மோட்சம் பெற்ற தலம்.புள் என்றால் பறவை.பூதம் என்றால் உடல்.உயிர் நீத்த ஜடாயூவிற்கு இராமபிரானே ஈமக்காரியங்கள் செய்தார்.எனவே இத்தலம் புள்ள பூதங்குடி ஆயிற்று.

கோதண்டத்தை மட்டும் கையில் ஏந்தி பெரிய பிராட்டியைப் பிரிந்த நிலையில் பெருமான் காட்சியளிக்கிறார்..ஜடாயூவிற்கு கரும காரியங்களை செய்து, கிழக்கு நோக்கி திருமுகம் காட்டி சயனம் கொண்டுள்ளார்.ஜடாயூ மோட்சம் பெற்ற தலமும் இதுவேயாகும்.

ஜடாயூவிற்கு மோட்சம் அளித்தபின் சிரம பரிகாரம் செய்யும் நிலையில் சயனித்திருப்பதாக ஐதீகம்.ஜடாயுவிற்கு இறுதிக்கடன் செலுத்துகையில், சீதாதேவி அருகில் இல்லை என ஸ்ரீஇராமன் வருந்திய போது அவனுக்கு உதவ பூமி பிரட்டி உதவினாராம்.

ஸ்ரீஇராமனின் சப்த இராம க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று (மற்றவை, அயோத்தி,திருப்புல்லாணி,திருப்புட்குழி,திரு எவ்வுளூர், திரு வெள்ளியங்குடி,திருக்காழி)
க்ருத்ர ராஜன் என்னும் மன்னன் எம்பெருமானை நோக்கி கடுந்தவம் செய்தான்.வல்வில் ராமனாக புஜங்க சயனத்தில் பெருமானை தரிசித்தான்.எனவே இங்குள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தாம் ஆயிற்று.மற்ற தீர்த்தம் ஜடாயூ தீர்த்தமாகும்.

No comments:

Post a Comment