Wednesday, June 1, 2016

8 - கோயிலடி (திருப்பேர் நகர்)

                                 

தஞ்சை, கும்பகோணத்திலிருந்து....திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி வழியாகச்  செல்லும்.பேருந்துகள் திருப்பேர் நகர் வழியாகவேச் செல்கிறது.கொள்ளிடத்தின்  அக்கரையில் அன்பிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர்.திருப்பேர் நகர், கோயிலடி என்றும் வழங்கப் படுகிறது.

காவிரிக்கரையில் ஒரு மேட்டின் மீது கோயில் அமைந்துள்ளபடியால், குளித்துவிட்டு பெருமளைத் தரிசிக்கவும் வசதியுள்ளது.

அப்பக்குடத்தான் என்ற பெருமானை அப்பாலா உலகநாதன் என்றும் அழைப்பர்.உபமன்யு முனிவர் அருகில் அமர்ந்துள்ளார்,அவருக்கு ஆசி  கூறும் வகையில் புஜங்கசயனமாக மேற்கு நோக்கி அரவணையில் துயில் கொண்டிருக்கும் பெருமானின் வலக்கரம் அப்பக்குடத்தை அணைத்திருக்கிறது.

தாயார் இந்திராதேவிக்கு, கமலவல்லி என்று மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.

இக்கோயிலின் தீர்த்தம் இந்திர தீர்த்தம்.தலவிருட்சம் வில்வ மரமாகும்

நம்மாழ்வார் இங்கிருந்துதான் கடைசி பாசுரத்தைப் பாடியதாக வரலாறு உண்டு.எனவே, அவர் இங்கிருந்துதான் மோட்சம் பெற்றிருக்கக் கூடும் என்ற கருத்தும் உண்டு.

தினமும் மாலை வேளைகளில் பெருமாளுக்கு அரவணையாக அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள பெருமாளைத் தரிசித்து, சந்தானக் கிருஷ்ணனை மடியில் வைத்துப் பிரார்த்தனை செய்தால் மக்கட்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.இங்கு ஆஞ்சநேயர், வினாயகர் ஆகியோருக்கும் சந்நிகள் உண்டு.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் 33 பாசுகரங்களால் இக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

7- புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்

திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்ட இக்கோயில் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது.

இக்கோயில், வல்வில்ராமன் - பொற்றாமரையாள் ஆகிய கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர்.தாயார் ஹேமாம்புஜவல்லி எனப்படும் பொற்றாமரையாள், திருக்குளத்து தாமரைப் பூவிலிருந்து தோன்றியதால் இப்பெயர்.

இறைவன், வேறு எங்கும் காணமுடியாத நாங்கு திருக்கரங்களுடன் சங்கு ,சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ஸ்ரீராமன் காட்சியளிக்கிறார்.

இராமாயணக் காலத்தில் ஜடாயூ மோட்சம் பெற்ற தலம்.புள் என்றால் பறவை.பூதம் என்றால் உடல்.உயிர் நீத்த ஜடாயூவிற்கு இராமபிரானே ஈமக்காரியங்கள் செய்தார்.எனவே இத்தலம் புள்ள பூதங்குடி ஆயிற்று.

கோதண்டத்தை மட்டும் கையில் ஏந்தி பெரிய பிராட்டியைப் பிரிந்த நிலையில் பெருமான் காட்சியளிக்கிறார்..ஜடாயூவிற்கு கரும காரியங்களை செய்து, கிழக்கு நோக்கி திருமுகம் காட்டி சயனம் கொண்டுள்ளார்.ஜடாயூ மோட்சம் பெற்ற தலமும் இதுவேயாகும்.

ஜடாயூவிற்கு மோட்சம் அளித்தபின் சிரம பரிகாரம் செய்யும் நிலையில் சயனித்திருப்பதாக ஐதீகம்.ஜடாயுவிற்கு இறுதிக்கடன் செலுத்துகையில், சீதாதேவி அருகில் இல்லை என ஸ்ரீஇராமன் வருந்திய போது அவனுக்கு உதவ பூமி பிரட்டி உதவினாராம்.

ஸ்ரீஇராமனின் சப்த இராம க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று (மற்றவை, அயோத்தி,திருப்புல்லாணி,திருப்புட்குழி,திரு எவ்வுளூர், திரு வெள்ளியங்குடி,திருக்காழி)
க்ருத்ர ராஜன் என்னும் மன்னன் எம்பெருமானை நோக்கி கடுந்தவம் செய்தான்.வல்வில் ராமனாக புஜங்க சயனத்தில் பெருமானை தரிசித்தான்.எனவே இங்குள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தாம் ஆயிற்று.மற்ற தீர்த்தம் ஜடாயூ தீர்த்தமாகும்.

Tuesday, May 31, 2016

6 - திருவெள்ளறை

                                           
புண்டரீகாட்சன் கோயில்

திருவெள்ளறை, திருச்சிக்கு அருகில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும்.இங்கு புண்டரீகாட்சன் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

திருச்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தலத்திற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாக பேருந்தில் செல்லலாம்.திருச்சி பஸ் நிலையத்திலிருந்தும் பஸ் வசதி உண்டு.

பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில் இது.

பெருமாள் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கி காணப்படுகிறது.தாயார் செண்பகவல்லி என்னும் பங்கயச்செல்வி.தாயாருக்கு தனி சந்நிதி உண்டு.

ஸ்ரீரங்கத்தைவிட பழைமையான இத்த்லம் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப் படுகிறது.வெண்மையான பாறையிலால் ஆன மலை என பொருள் பட வெள்ளறை என்றும் திருவெள்ளறை என்றும் அழைக்கப் படுகிறது.

திவ்யசந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்னிகா என ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள் அமைந்துள்ளன.

எங்குமில்லா வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும், தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன.தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமாளைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

சிபி சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என பெயர் ஏற்பட்டதாகவும் தல வரலாறு சொல்கிறது. இதன் காரணமாக ஸ்வேதபுரி நட்சத்திரம் என்றும் அழைக்கப் படுகிறது.

சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன.ஸ்ரீதேவி,பூதேவி,சூர்ய சந்திரர்கள், ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில்  கைங்கர்யம் செய்வது தனிச் சிறப்பு.

ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை

இதில் ஸ்ரீதேவி நாச்சியார்க்கு "திருவெள்ளறை' தாயாருக்கு சிறப்பு அம்சம் உள்ள இத்தலத்தில் அவரை வணங்கிய பின்னரே, இறைவன் சந்நிதிக்கு செல்ல இயலும்.பல்லக்கு புறப்பாடும், தாயார் பல்லக்கு முன்னே செல்ல, மூலவர் பல்லக்கு அதைத் தொடர்ந்து செல்லும்.(மற்ற இடங்களில் பெருமாள் முன் செல்ல தாயார் பின் தொடர்வார்)

பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மொத்தம் 24 பாசுரங்கள்

இந்திரனோடு பிரமன்
ஈசனிமையவ ரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு
மறைந்துவ ராய்வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும்
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்நியம் போதிது வாகும்
அழகனே! காப்பிட வாராய்

Monday, May 30, 2016

5 - உத்தமர் கோயில்

                                       

ஏறத்தாழ 1000 வருடங்களுக்கு முன்பானது  திருக்கரம்பனூர் உத்தமர் கோயிலாகும்.

திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள திருத்தலமான இதில் மும்மூர்த்திகளும் குடி கொண்டுள்ளது இத்தலத்தின் சிறப்பாகும்

இதைத்தவிர இத்தலம் தன்னகத்தே பல சிறப்புகளைக் கொண்டுள்ளது

கடம்பமரங்கள் அதிகம் இருந்தமையால் கடம்பனூர் என வழங்கப்பெற்று, பிறகு அதுவே கரம்பனூர் எனவும் திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர்.இதுவே வடமொழியில் நீப க்ஷேத்திரம் என்றானது.

புருஷோத்தமரும் எழுந்தருளியுள்ளதால் உத்தமர்கோயில் எனப் புகழ்ப் பெற்றது.சிவபெருமான் திருவோடு ஏந்தி பிச்சைக் கேட்ட திருக்கோலத்தில் உள்ளமையால் பிட்சாடனர் கோயில் (பிட்சாண்டவர் கோயில்) என்றும் பெயர் பெற்றது.

மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி க்ஷேத்திரம் எனவும் வழங்கப்படுகிறது.

பலமன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்துள்ளதாக இங்கு ணப்படும் குறிப்புகள் சொல்கின்றன.அவர்களுள் சோழமன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனும் அடங்குவர்.

முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே இல்லாமல் இருந்ததாகவும்,அதனால் எந்த நேரமும் இறைவனைத் தொழுதிட முடிந்ததாகவும் குறிப்பொன்றும் உள்ளது.

பெருமாள் சந்நதி , தாயார் பூர்வாதேவி பூர்ணவல்லி சந்நிதி ,சிவன் சந்நிதி,பார்வதி சந்நிதி,பிரம்மா சந்நிதி,சரஸ்வதி சந்நிதி என ஒவ்வொருவருக்கும் தனி சந்நிதி இத்தலத்தின் சிறப்பு.பெருமாள் கிழக்கு நோக்கிய புஜங்கசயனம்.

திருமங்கை ஆழ்வார், கதம்ப மகரிஷி,உபரிகிரவசு,சனகர்,சனந்தனர் முதலானோருக்கு பெருமாள் காட்சி தந்து அருளியுள்ள தலமாகும்

அப்பர், சுந்தரர்,திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களும் இத்தலம் குறித்து பதிகம் பாடியுள்ளனர்.

108திவ்வியத் தலங்களான இக்கோயில், திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வித்த கோயிலாகும்.அவரது பாசுரம் ஒன்று...

பேரானைக் குறுங்குடியெம்
பெருமானை  திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர்
உத்தமனை, முத்திலங்கு
காரார்திண் கடலேழு
மலையேழிவ் வுலகேழுண்டும்
ஆராதென் றிருந்தானைக்
கண்டதுதென் னரங்கத்தே

தல விருட்சம் கதலி (வாழைமரம்) தீர்த்தம், கதம்ப தீர்த்தம்.

Thursday, May 26, 2016

4 - திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்

                               

 திருச்சி திருமழிசை ஆழ்வார் விஷ்ணு


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்

பெயர்
புராண பெயர்(கள்): திருஅன்பில் கோவில்
பெயர்: வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்

அமைவிடம்

ஊர்: திருஅன்பில் கோவில்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு

கோயில் தகவல்கள்
மூலவர்: வடிவழகிய நம்பி (விஷ்ணு)
தீர்த்தம்: மண்டூக தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்: தாரக விமானம்
கல்வெட்டுகள்: உண்டு
திரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும்.


மங்களாசாசனம்
திருமழிசை ஆழ்வாரால் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, May 25, 2016

3 - தஞ்சை மாமணிக் கோயில்

                                             

 தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் (மங்களாசாசனத் தலம்) ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற  இத்தலம் தஞ்சைக்கருகில் வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில், நரசிம்மப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் அடங்கும். இம் மூன்று கோயில்களும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் சுமார் ஒரு மைலுக்கும் குறைவான சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் வெண்ணாற்றங்கரையில் இருக்கிறது.

இறைவன், இறைவி பற்றிய விவரங்கள்[

தஞ்சை மாமணிக் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் நீலமேகப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: செங்கமலவல்லி. தீர்த்தம்:கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு இக்கோயிலின் விமானம் சௌந்தாய விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களில் பாடியுள்ளார்.

அவற்றுள் ஒரு பாடல்:

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய், மூர்த்தி வேறு ஆய்
உலகு உய்ய நின்றானை; அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை; கன்று மேய்த்து
விளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை; வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே

மணிக்குன்றம் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் மணிக்குன்றப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: அம்புச வல்லி. தீர்த்தம்: ஸ்ரீராம தீர்த்தம். இக்கோயிலின் விமானம் மணிக்கூட விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் இத்தலத்தை நம்மாழ்வார் பாடியுள்ளார்.

தஞ்சையாளி நகர் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஸ்ரீவீரசிங்கப்பெருமாள், நரசிம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவி:தஞ்சை நாயகி தீர்த்தம் சூர்ய புஷ்கரணி. இக்கோயிலின் விமானம் வேதசுந்தரவிமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார்.


நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்களுக்கு அருளுவதாகவும் மரபு. இம்மூன்று தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும், மணிக்குன்றப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் சீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.. பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற வைணவத் திருத்தலம் இதுவாகும். தஞ்சையைப் பார்த்த வண்ணம் இறைவன் சிலைகள் அமைந்திருப்பதால் தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணியென்றும் போற்றப்படுகிறது.

Sunday, May 22, 2016

2 - திருக்கோழி (உறையூர்)

                                     


உறையூர் அழகிய மணவாளர் கோயில்


புராண பெயர்(கள்): திருக்கோழி, உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர், உறையூர்

அமைவிடம்
ஊர்: உறையூர்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா


கோயில் தகவல்கள்
மூலவர்: அழகிய மணவாளன்
தாயார்: கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்: கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி
ஆகமம்: பாஞ்சராத்ரம்
பிரத்யட்சம்: ரவிதர்மா, கமலவல்லி.
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.

தலவரலாறு
----------------------------------
துவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்தசோழன் தமக்கு புத்திர பாக்கியம் அருள திருவரங்கத்து பெருமாளை வேண்டி வர தாயார் தாமரை ஓடையில் சிறு குழந்தையாகக் கிடக்க, கமலவல்லி எனப்பெயரிட்டு தம் மகளாக வளர்த்த மன்னன், கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுன் மறைந்த பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயில்
கலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது
.
சிறப்பு
--------------------------
திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலம்.

திருக்கோழி பெயர்க்காரணம்

சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று.


திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. முதன்மைத் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலிலிருந்து நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ளது.