Friday, July 1, 2016

44 - திருப்புல்லாணி

                     
                       
அருள்மிகு ஆதிஜெகநாதர் கோயில்

மூலவர் - ஆதி ஜெகநாதர், கல்யாணஜெகநாதர்

உற்சவர்- கல்யாண ஜெகநாதர்

தாயார்- கல்யாணவல்லி, பத்மாசனி

தலவிருட்சம்- அரசமரம்

ராமநாதபுரத்திலிருந்து 10கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணிக்கு பேருந்துகள் உண்டு.திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் திருத்தலம்.

சீதையை மீட்க இலங்கை செல்ல ராமன், கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார்.அப்போது தர்ப்பைப் புல்லின் மீது சயனம் கொண்டார். ராமன் ஆதிஷேசன் மீது தர்ப்பை விரித்து அதில் சயனம் கொண்டார்.அதன்படி சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது.சீதையை மீட்கும் முன் தங்கியத் தலம் என்பதால் சீதை இல்லை.லட்சுமணனின் வடிவமாக ஆதிஷேசன் இருப்பதால் லட்சுமணனும் இல்லை.ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார்.மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் உள்ளனர்.

திருப்புல்லாணியிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் சேதுக்கரை உள்ளது.ராமன் இங்கிருந்துதான் இலங்கைச் செல்ல பாலம் அமைத்தார்.சேது என்றால் அணை.அணை கட்டியுள்ள கரை என்பதால் சேதுக்கரை எனப் பெயர்.

திருமங்கையாழ்வார், தவிர்த்து ஆண்டாள்,திருமழிசையாழ்வார்,குலசேகர ஆழ்வார் ஆகியோர் சேதுபாலம் பற்ரி பாடியுள்ளனர்.பஞ்சதரிசனம் பூரியில் பாதியளவே (சிலையின் அள்வே) காட்சி தரும்.இங்கு ஜெகந்நாதர் முழுமையாகக் காட்சித் தருகிறார்.இத்தலம் அதனால் தட்சிணஜெகந்நாதம் எனப்படுகிறது.ஆதி ஜெகந்நாதர் அமர்ந்த கோலம்,கிடந்த கோலம்,நின்றகோலம்,அரச பெருமாள்,பட்டாபிராமர் என ஐந்து வடிவங்களில் மகாவிஷ்ணுவையும் மூன்று கோலங்களில் தரிசிக்கலாம்.

பல நூற்றாண்டுகள் ஆன அரசமரம் இத்தலத்தின் சிறப்பு