Thursday, June 30, 2016

43 - திருமயம்


                                   


சத்தியபெருமாள் கோயில்

மூலவர் - சத்தியமூர்த்தி, திருமெய்யர்

உற்சவர் - அழகியமெய்யர்

தீர்த்தம் - சத்யபுஷ்கரணி

விருட்சம் - ஆலமரம்

புதுக்கோட்டையிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமயம் எனும் திருமய்யம் கோயில்

இத்தலத்தில், சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.சைவ, வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்தியகிரீஸ்வரர் (சிவன்) கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் உள்ளது

திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைவிட் மிகப்பழமையானது.அதுகாரணமாக இத்தலத்திற்கு ஆதிரங்கம் என்றும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சத்திய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்.

இக்கோயில் பல்லவ காலத்து குடவரை கோயிலாகும்.திருமயம் மலைச்சரிவில் ஒரே கல்லினால் அமைந்த இக்குடைவரைக் கோயிலில் இரண்டு பெருமாள் சந்நிதிகள்.வேலைப்பாடமைந்த சத்தியமூர்த்திக் கோயில் அவற்றில் ஒன்று.இக்கோயிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது.எனவே, இந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலை தனியே சுற்றி வர முடியாது.
காரணம் மூலவர் கோயில் குடைவரைக்கோயிலாக அமைந்துள்ளதேயாகும்

சதுர்யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறுயுகம் பிறக்கும் காலச்சக்கரத்தைக் குறிக்கும் அளவு.இந்த அளவின்படி திருவரங்கத்துப் பெருமாள் 64சதுர்யுகங்களுக்கு முன்னால் தோன்றினார்.ஆனால் சத்தியகிரிநாதன் 96 சதுர்யுகங்களுக்கு முன் தோன்றியவராதலால் திருமய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழங்கப்படுகிறது.

இத்தலத்தில் சோமசுந்தர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி என்ற பெயரைத் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மறுகரத்தில் சக்கரத்துடனும் எம்பெருமாள் அருள்பாலிக்கின்றார்.தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாய் துணை நிற்பார் என இறைவன் வாக்குறுதி தந்ததால் இறைவனுக்கு சத்தியமூர்த்தி எனப் பெயர் வந்தது.3

இக்கோயிலின் மூலவர் யோகசயனமூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரைவிட மிகப்பெரியது.இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாள் உயரம் இந்தியாவிலேயே கோயில்களில் உள்ளவற்றில் பெரியது.சுற்றிலும் தேவர்கள்,ரிஷிகள்,பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மா, மார்பில் குடியிருக்கும் லட்சுமி ஆகியோருடன் எழுந்தருளியுள்ளார்.மூலவரான பெருமாளுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது.மது, கைடபர் எனும் இரு அசுரர்களிடமிருந்து பூமிதேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றி அருள்வதாக தல வரலாறு

பெருமாள், யோக நித்திரையில் இருக்கையில், அவ்வரக்கர்கள் ஸ்ரீதேவி,பூதேவி ஆகியோரை அபகரிக்க முயன்றனர்.இதனால் அவர்கள் ஓடி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்தனர்.பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என, அவரை எழுப்பாமல் ஆதிஷேசன் எனும் ஐந்து தலை நாகம் விஷத்தைக் கக்க அசுரர்கள் ஓடி ஒளிந்தனர்.பின் கண் விழித்த பெருமாள் ஆதிஷேசனை மெச்சிப் புகழ்ந்தார்

திருமெய்யம் குன்றின் தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும், சிவனுக்கும் அடுத்தடுத்து திருக்கோயில்கள் உள்ளன.இக்கோயில்கள் சைவ, வைணவ ஒற்றுமைக்கு உதாரணம் எனலாம்

இக்கோயில் சத்யபுஷ்கரணி அனைத்து பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்தது.

தாயார் உஜ்ஜீவனத் தாயார் (ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்)
இவர் வீதி உலா வருவதில்லை.கோயிலுக்குச் சென்றால் மட்டுமே தரிசிக்க முடியும்.


Wednesday, June 29, 2016

42 - திருக்கோஷ்டியூர்

                                       

சௌமிநாராயணன் பெருமாள் கோயில்

சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.மதுரையிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகங்கை-திருப்பத்தூர் சாலயில்திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

கருவறையில், ஸ்ரீதேவி,பூதேவி  உடனுறை    சௌமிநாராயணனுடன்,மதுகைடபர்,இந்திரன், புருரூப சக்கரவர்த்தி,கதம்ப மகரிஷி,பிரம்மா, சரஸ்வதி, சாவித்ரி ஆகியோரும் உள்ளனர்.அருகில், சந்தான கிருஷ்ணன் தொட்டிலில் உள்ளார்.இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர்.மகாலட்சுமி தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது.

ஓம்ந மோ நாராயணாய..எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.விமானத்தில் கீழ் தளத்தில் நர்த்த்ன கிருஷ்ணர்(பூலோக பெருமாள்) முதல்தளத்தில் ஆதிஷேசன் மீது சயன கோலத்தில் சௌமியநாராயணர் ,...இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர்..மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் எனசுவாமி நாங்கு நிலைகளில் அருளுகிறார்

புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்த போது மகாமகம் பண்டிகை வந்தது.அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபன்.அவருக்காக ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில்
கங்கை பொங்க அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார்.பிரகாரத்தில் உள்ள இந்தக் கிணறு மகாமகக் கிணறு என அழைக்கப் படுகிறது.மகாமகம் போது சௌமிநாராயணர் கருடன் மீது எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்

இரண்யகசிபை அழிக்கும் பொருட்டு...நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளினார்.தேவர்களும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவர்களும் விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்று, கிடந்த, இருந்த,நடந்த என நாங்கு கோலங்களை காட்டி அருளினார்.தேவர்களின் திருக்கை (துன்பததை) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் ஆயிற்று

கோயில் பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார்.கோயில் முகப்பில் சுயம்புலிங்கம் உள்ளது.அஷ்டாங்க விமானத்தில் வலப்பக்கத்தில் நரசிம்மரின் அருகில் ராகு, கேது உள்ளனர்

பெரியாழ்வார்,திருமங்கையாழ்வார்,திருமழிசைஆழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்தத் தலம் இது.


Monday, June 27, 2016

41 - அழகர் கோயில்

                             



இத்தலம், மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.திருமாலிருஞ்சொலை என அழைக்கப்படும் இக்கோயில், பெரியாழ்வார்,ஆண்டாள்,பேயாழ்வார்,திருமங்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டத்தலமாகும்.இவர்கள் மொத்தமாக சேர்த்து 108 பாடல்களை இத்தலம் குறித்து பாடியுள்ளனர்.

இத்தலம், சோலைமலை,திருமாலிருஞ்சோலை,மாலிருங்குன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார்.உற்சவர் அழகர் அல்லது சுந்தராசப் பெருமாள் ஆவார்.

பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள்,மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோர்களால் இக்கோயில் திருப்பணி செய்யப் பட்டுள்ளது.

மூலவரின் கருவறை விமானம் சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்ரும் இசைத்தூண்கள் உள்ளன.இசைத்தூணின் உச்சியில் உள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்கமுடியாதவாறு உள்ளது.
வசந்த மண்டபத்தில், ராமாயண, மகாபாரத  நிகழ்ச்சிகள் அழகிய ஓவியங்களாக உள்ளன.இராயகோபுரம், திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.அழிந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் போற்றத் தக்கது.

கோயிலைச் சுற்றி உள்கோட்டை மற்ரும் வெளிக்கோட்டை  எனப்படும் இரணியங்கோட்டை அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

அழகர்கோயிலின் அடிவாரத்திலிருந்து 3 கிலோ  மீட்டர்  தொலைவில் ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது

அழகர்கோயில் அடிவாரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலை வில் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை உள்ளது

கள்ளழகர், மீனாட்சி அம்மனின் உடன் பிறந்தவர்.சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர், அழகர்கோயிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்.வைகை ஆறுவரை வந்து வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார்.

                                               

                                                           கள்ளழகர்

திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்கும் விழா சித்திரை மாதம் முழுநிலவன்று மதுரையை அடுத்த தேனூரில் நடைபெற்றது.திருமல நாயக்கர் காலத்தில் கள்ளழகரை வைகை ஆற்றில் எழுந்தருளச் செய்து மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தப்பட்டது.சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர்சேவை என்று கொண்டாடப்படுகிறது

சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுரகங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும் போது எதிர்ப்பட்டதுர்வாசமுனிவரைக் கவனிக்காமல் இருக்க, அதைக் கண்ட துர்வாச முனிவர் , சுதபரை மண்டூகமாக (தவளையாக) இருக்க சாபமிட்டார்.சாபம் நீங்க சுதப முனிவர் வைகையாற்றில் நீண்ட காலம் தவமிருக்க திருமாலால் சாபம் நீங்கப் பெற்றார்.முனிவர் அங்கு வணங்கியவரே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும், அழகர், மாலிருஞ்சோலை னம்பி என்று தமிழிலும் அழைக்கப்பட்டார்

கோயில் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலாயோக நரசிம்மர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தைத் தவிர்க்க தினமும் தண்ணீர்,தயிர், வெண்ணெய்,தேன் முதலியவற்றால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது).ஜ்வாலாயோக நரசிம்மரின் கோபத்தைத் தணித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது.மகாவிஷ்ணு கோயிலில் நரசிம்மர் மூலவரின் இடது ஓரத்தில் இருப்பார்.இங்கு மூலவருக்கு நேர் பின்புறமுள்ளார்

மூல்வர் - அழகர் அல்லது அழகிய தோளூடையான் (வடமொழியில் சுந்தரபாஹூ)

தாயார்- சுந்தரவல்லி

கிழக்கே திருமுக ம்ணடலம்

தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு

உற்சவர்- கள்ளழகர்

அழக்ர்மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது.அரிசி, உளுந்து,மிளகு, சீரகம், நெய் கலந்து தோசை தயாரிக்கப்படுகிறது

Sunday, June 26, 2016

40 - திருப்பார்த்தன் பள்ளி

                               



தாமரையாள் கேள்வன் கோயில்


இத்தலம் சீர்காழி அருகில் திருவெண்காட்டிலிருந்து அரைமைல் தூரத்தில்  அமைந்துள்ளது.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. பார்த்தனுக்காக (அர்ச்சுனன்) உண்டான கோயில் ஆனதால் பார்த்தன் பள்ளியாயிற்று.அர்ச்சுனனுக்கும் இங்கு ஒரு கோயில் உண்டு.

வருணன், இங்கு திருமாலைக் குறித்து தவமிருந்து தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்க வேண்ட, அப்படியே நடந்தபடியால் பார்த்தசாரதிபள்ளியென வழங்கி, பின்னர் பார்த்தன்பள்ளி ஆயிற்று.பதினோரு திருப்பதிகளின் இறைவர்களும் தை அமாவசைக்கு இங்கு எழுந்தருளி   மறுநாள்  திருநாங்கூர் கருட சேவைக்கு எடுத்துச் செல்லப்படுவர்.

தனியாக யாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது புரசங்காடு எனும் வனப்பகுதியை அடைந்தான்.அப்போது, தாகம் எழ நீர் தேடிச் சென்றபோது...அகத்தியர் ஆசிரமம் வந்த அர்ச்சுனன் அவரிடம் தண்ணீர் கேட்க...அகத்தியரும் தன் கமண்டலத்திலிருந்த் நீரைப் பருகக் கொடுத்தார்.ஆனால், அர்ச்சுனனால் அருந்த இயலாதவாறு நீர் மறையவே  வருந்தினான்.அகத்தியர் தனது ஞானதிருஷ்டியால் காரணத்தைக் கண்டறிந்தார்.

பல்வேறு சோதனைகளிலும் காத்த கண்ணனை நினையாது, என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால் கண்ணன் செய்த லீலை இது எனக்கூற...அர்ச்சுனன் கண்ணனை நினைத்து வேண்ட கண்ணன் தரிசனம் கொடுத்து, கத்தியால் பூமியைக் கிளறச்சொல்லி, அதிலிருந்து நீர் வந்தது.அர்ச்சுனன் தாகம் தணிந்தான்

இறைவன் - மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் தாமரையாள் கேள்வன்
உற்சவர்- பார்த்தசாரதி
தாயார் - தாமரை நாயகி, ஸ்ரீசெங்கமவல்லி
தீர்த்தம்- சங்க சரஸ்

(திருநாங்கூர் பதினோரு திருப்பதிகள் எனக் கூறப்படும் தலங்கள்

திருக்காவளம்பாடி
திருவண்புருடோத்தமம்
திரு அரிமேய விண்ணகரம்
திருச்செம்பொன் செங்கோயில்
திருமணிமாடக் கோயில்
திரு வைகுந்த விண்ணகரம்
திருத்தேவனார்த் தொகை
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன் பள்ளி)

Saturday, June 25, 2016

39 - திருவெள்ளக்குளம்


                                 


அண்ணன் பெருமாள் கோயில்

சீர்காழியிலிருந்து 8 மிலோமீட்டர் தொலைவில் சீர்காழி- டஹ்ரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்று.

இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் இத்தலத்திற்கு இப்பெயர் வந்தது.வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை.எனவே ஸ்வேத புஷ்கரணி...வெள்ளைக் குளமாகி பின் வெள்ளக்குளமாயிற்று.திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்ற தலம்.அவர் இத்தல இறைவனை அண்ணா என அழைத்துப் பாடியமையால் அண்ணன் கோயில் என்றும்   அழைக்கப்படுகிறது

அழகியமணவாள முனிக்கு இறைவன் இங்கு காட்சியளித்ததாக நம்பிக்கை.108 வைணவத் திருத்தலங்களில் திருமலையில் இறைவனுக்கும் வழங்கப்பட்டுள்ள பெயரே இத்தலத்திலும் இறைவனின்  பெயராக   உள்ளது.
இப்படி பெயர் உள்ளத் தலம் இது ஒன்றே.ஆகவே,  திருவேங்கடத்தானுக்கு    வெள்ளக்குளத்தான் அண்ணன் என்ற நம்பிக்கையில் திருப்பதிக்கு வேண்டுதலையை இங்கு செலுத்துவது மரபு. இதற்கு அதனால்  தென் திருப்பதி ர்ன்றும் பெயர்

திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் பிறந்த தலமும், நீலன் என்ற பெயரில் பதியாக இருந்த திருமங்கையாழ்வார், ஆழ்வாராக மாறிய தலமும் இதுவாகும்.ஒரு மங்கையால் ஆழ்வாராக ஆனதால் திருமங்கையாழ்வார் என அழைக்கப்பட்டார்

இறைவன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்

இறைவன் - ஸ்ரீனிவாசன், பெருமாள்
தாயார் - அலர்மேல்மங்கை
தீர்த்தம்-ஸ்வேதபுஷ்கரணி

Friday, June 24, 2016

37 - திருமணிக்கூடம்

                                       


வரதராஜப் பெருமாள் கோயில்

திருமணிக்கூடம் திருநாங்கூருக்கு கிழக்கே அரை மைல் தொலைவிலேயே உள்ளது.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று

திருமணிக்கூடம்....பெயருக்கு ஏற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.பதினோரு திருப்பதி பெருமாள்களும் எழுந்தருளும் தைஅமாவாசைக்கு மறுநாள் கருடசேவைத் திருவிழாவிற்கு இத்தலப் பெருமாளையும் எடுத்துச் செல்வர்

கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் இறைவன் இங்கு அருள்பாலிக்கிரான்.தாமரை பீடத்தி மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு, சக்கரமும் முன் கைகளில் அபய, ஊரு முத்திரைக் காட்டியபடி அருள்பாலிக்கிறார்.வலது புறத்தில் தாமரை பீடத்தின் மீது நின்றபடியே இடது கரத்தில் தாமரை மலரும், வலது கரத்தைத் தொங்கவிட்டபடியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறார்.இடது புறத்தில் பூமாதேவி வலது கரத்தில் தாமரை மொட்டும் ,இடது கரத்தைத் தொங்க விட்டபடியும் இருக்கிறார்.

அர்த்த மண்டபத்தில் நம்மாழ்வார் அமர்ந்த நிலையில் உள்ளார்.

இறைவன் - வரதராஜப் பெருமாள், கஜேந்திர வர்மன்,மணிக்கூட நாயகன்

தாயார்- திருமாமகள் நாச்சியார், (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி

தீர்த்தம் - சந்திர புஷ்கரணி

38 - திருக்காவளம்பாடி

                                   
கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில்

இறைவன்  - கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)

தாயார் - மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்

தீர்த்தம் - தடமலர்ப் பொய்கை

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது.திருநகிரியிலிருந்து நடக்கும் தூரம்

கண்ணன், சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தான்.இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருள்களை மீட்டு அவர்களுக்கேத் தந்தான்.வெகுநாளைக்குப் பின்னர், இந்திரன் தோட்டத்தில் இருந்த பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க,கண்ணன் இந்திரனிடம் கேட்க, இந்திரன் கொடுக்க மறுத்தான்.இதனால் கோபமுற்ற கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழில்) அழித்தான்.பதினோரு எம்பெருமாங்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணன் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி இந்த காவளம்பாடியில் கோயில் கொண்டான் என தல வரலாறு சொல்கிறது.தாயாருக்கு என இங்கு தனி சந்நிதி இல்லை.

திருமங்கையாழ்வார் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்களுக்கு அன்னதானம் செய்த மங்கைமடம் மிக ருகிலேயே உள்ளது.

பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

Thursday, June 23, 2016

36 - திருத்தெற்றியம்பலம்

                                             



பள்ளிகொண்ட பெருமாள் கோயில்

நாகை மாவட்டம் திருநாங்கூர் அருகில் உள்ளது இத்திருத்தலம்

இறைவன் _ செங்கண்மால் ரங்கநாதர்

தாயார்- செங்கமலவல்லி

தீர்த்தம் - சூர்யபுஷ்கரணி

திருத்தெற்றியம்பலம் எனப்படும் பெருமாள் பள்ளி கொண்ட சந்நிதி.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம்.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுல் ஒன்று.108 வைணவத் திருத்தலங்களில் இதில் மட்டுமே "அம்பலம்" என்ற சொல்லுடன் தலம் அழைக்கப்படுகிறது.மணவாள மாமுனிவர் இங்கு வந்து சென்றுள்ளார்

நான் கு தோள்களுடன் கிழக்கு நோக்கி சயனித்து பெருமாள் அருள்பாலிக்கிறார்,

திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளியிருக்கும் தைஅமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.

Wednesday, June 22, 2016

35 - திருச்செம்பொன் செய்கோயில்

                               



பேரருளாளன் பெருமாள் கோயில்

திருச்செம்பொன் செய்கோயில்...திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்ற தலம்.

திருநாங்கூரில் நடுவில் அமைந்துள்ளதலமாகும்

இராவணனை அழித்த்பின் ஸ்ரீராமன் இத்தலத்தில் இருந்த திருடநேத்திரர் எனற முனிவரின் குடிலில் தங்கி, அவர் கூறியபடி தங்கத்தினால் பசு செய்து அப்பசுவைத் தானம் செய்தார்.அந்தப் பொன்னைக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டபடியால் செம்பொன்செய் கோயில் என தலவரலாறு கூறுகிறது

திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தைஅமாவாசைக்கு அடுத்த நாள் இப்பெருமாளும் திருநாங்கூர் கருடசேவையில் எழுந்தருளுவார்

 இறைவன்_ செம்பொன் ரங்கர், ஹேமரங்கர்,பேரருளாளன்

தாயார் - அல்லிமாமலர் நாச்சியார்

தீர்த்தம் - ஹேம புஷ்கரணி, கனக தீர்த்தம்

34 - திருவண் புருடோத்தமம்


                                               

திருவண்புருடோத்தமம் கோயில்

திருநாங்கூர் திருத்தலங்களில் திருவண்புருடோத்தமம் பெருமாள் கோயிலும் ஒன்றாகும்.சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்லது.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்

பெருமாள் - புருடோத்தமன்

தாயார்- புருடோத்த்ம நாயகி

தீர்த்தம் - திருப்பாற்கடல் தீர்த்தம்

தமிழ்நாட்டில் உள்ள வைணவத்திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியுள்ளது இங்கு மட்டுமே! இறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண்புருஷோத்தமம்என்று ஆயிற்று

மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளனர்.திருநாங்கூர் பதினோரு திருப்பதி பெருமாள்களும் இங்கு எழுந்தருளும் தைஅமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் கருட சேவைக்கு திருநாங்கூருக்கு இப்பெருமாளும் செல்வார்.

வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் பெருமாளுக்கு பூமாலை சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார்.இக்கோயில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தன் குழந்தை உபுமன்யுவை உட்காரவைத்துவிட்டு பூப்பறிக்கச் சென்றார்.குழந்தை பசியால் அழுதது.புருடோத்தம நாயகி தூண்ட, வண்புருஷோத்தமர் திருப்பாற்கடலை வரவழித்து குழந்தைக்கு பாலைப்புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்குக் காட்சி தந்தார் என்பது இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும்.

இறைவன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

Tuesday, June 21, 2016

33 - திருத்தேவனார்த் தொகை


                                       

இறைவன்  -  தெய்வ நாயகன், மாதவ நாயகன்

இறைவி - கடல்மகள் நாச்சியார்

தீர்த்தம் - சோபன புஷ்கரணி மற்றும் தேவஸ்பா புஷ்கரிணி

திருத்தேவனார்த் தொகை, திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளில் இதுவும் ஒன்றாகும்.இத்னை கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர்.திருநாங்கூரிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் மன்னியாற்றின் தென் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.திருநாங்கூரில் பதினோரு  இடங்களில் கோயில் கொண்டுள்ல நாராயணனை சேவிக்க தேவர்கள் வந்தபோது கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை என்றானது

இத்தலத்தை மாதவப்பெருமாள் கோயில் என்றும் கூறுவர் 

32 - அரியமேய விண்ணகரம்

                                     

குடமாடு கூத்தன் திருக்கோயில்

மூலவர் - கடமாடு கூத்தன்

உற்சவர் - சதுர்புஜ கோபாலர்

தாயார் - அமிர்தவல்லி

தீர்த்தம்- அமிர்த தீர்த்தம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

பெருமாள் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய்ப் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சித் தருகிறார்.குடத்துடன் ஆடிக்கொண்டே வந்தவர் என்பதால் குடமாடு கூத்தன் எனப் பெயர்.கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கொண்டு மக்களைக் காத்தவர் கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் எனலாம்.திருமங்கையாழ்வார் இவரை, அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை சூரசம்காரம் செய்தது என புகழ்பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்வியத்தலங்களில் இதுவும் ஒன்று.அரி (விஷ்ணு)மேவியிருக்கும் தலம் என்றும் அரியமேய விண்ணகரம் என்றும் பெயர்.

இங்கு கொடிமரம் இல்லை.பீடத்தின் மீது ஏறிச்சென்றே இறைவனை வணங்கும்படி பெரியதாக உள்ளது.

31 - திருவைகுந்த விண்ணகரம்

                                             
இறைவன் - வைகுந்தநாதன்

தாயார்- வைகுந்தவல்லி

தீர்த்தம்- லட்சுமி புஷ்கரணி,உத்தங்க புஷ்கரணி,விரஜா

திருவைகுந்த விண்ணகரம் எனப்படும் வைகுந்த விண்ணகரம் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்.இது, நாகை மாவட்டம் திருநாங்கூரில் அமைந்துள்ளது

வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுந்தநாதனஏ இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் எனபதும், ருத்ரதாண்டவம் ஆடிய சிவனின் ஆட்டத்தை நிறுத்த பரமபதநாதன் புறப்பட அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் திருநாங்கூர் வந்தனர் என்பதும்,பரமபதத்தில் இருந்து அப்படியே எம்பெருமான் வந்தத்தால் அதே தோற்ரத்தில் காணப்படுகிறார் என்பதும் தொன்நம்பிக்கை.

கிழக்கு நோக்கிப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

Monday, June 20, 2016

30 - திருமணிமாடக் கோயில்

                                       



திருநாங்கூர்-  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து தெங்கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநாராயண பெருமாள் கோயில்

மூலவர் - நாராயணன், நந்தாவிளக்குப் பெருமாள்

உற்சவர்- நாராயணன், அளத்தற்கரியான்

தாயார்- புண்டரீகவல்லி

தீர்த்தம் - இந்திர புஷ்கரிணி,ருத்ர புஷ்கரிணி

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்த இங்கு இறைவன் எழுத்தருளியிருப்பதால் திருமணிமாடக் கோயில் எனப் பெயர் பெற்றது.பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணன் அதேபோன்று அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.ராமானுஜருக்கும் நாராயண மந்திரம் உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு இறவனைத் தரிசித்துள்ளார்.


கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார்

Sunday, June 19, 2016

29 - திருவெள்ளியங்குடி

                                         


கோலவல்லி ராமர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது இக்கோயில்

மூலவர் - கோலவில்லி ராமர், ஸ்ரீராப்திநாதன்

உற்சவர் - சிருங்கார சுந்தரர்

தாயார் - மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)

தலவிருட்சம் - செவ்வாழை

தீர்த்தம் - சுக்கிர தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்

திருமங்க்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

பெருமாளின் 108 திருத்தலங்களில் இங்கு மட்டும் கருடாழ்வார் சங்கு,சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.பெருமாள் கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.சோழர்களால் கட்டப்பட்டது இக்கோயில்.சுக்கிரன், பிரம்மா, மயன் ஆகியோர் இத்தல இறைவனை தரிசித்துள்ளனர்.

தனக்குக் கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே இத்தலம் நவக்கிரகத் தலங்களில் சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, வந்தது இறைவன் என்றறியாத மன்னனும் சம்மதிக்க..ஆனால், உண்மை நிலை அறிந்த சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை...வண்டாக உருவெடுத்து அடைத்துவிட்டார்.இந்தச் செயலை அறிந்தபகவான் , ஒரு குச்சியால் துவாரத்தைக் குத்த, ஒரு கண்ணை இழந்தார் சுக்கிராச்சாரியார்.சுக்கிரன் ஒரு கண் இழ்ந்த நிலையில் பலத் தலங்களில் வழிப்பட்டு இங்கு மீண்டும் பார்வையினைப் பெற்றார்.இதனால் இத்தலம் வெள்ளி (சுக்கிரன்)யங்குடி என்றானது

தவிர்த்து, தேவ சிற்பியான விஸ்வகர்மா, பெருமாளுக்கு அழகிய கோயில்களைக் கட்டி முடித்ததைப் பார்த்த, அசுரகுல சிற்பி மயன், தன்னால் கட்டமுடியவில்லையே என வருத்தப்பட்டு பிரம்மனை வேண்டினான். பிரம்மனும், இத்தலம் பற்றிக் கூறி இங்கு மயனை பெருமாளை வேண்டி தவம் இருக்கச் சொன்னான்.பெருமாள், சங்கு சக்கரத்துடன் மயனுக்கு தரிசனம் தர, மயனோ, தனக்கு ராம அவதாரமாய் காட்சித் தர வேண்டினான்.தன் கரத்திலிருந்த சங்கு, சக்கரத்தை, கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு பெருமான் கோலவில்லி ராமனாக அம்புகளுடன் காட்சி தந்தார்.

Saturday, June 18, 2016

27 - திருக்கண்ணமங்கை

                                             


பக்தவத்சலப் பெருமாள் கோயில்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது இக்கோயில்

மூலவர்- பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப்பெருமாள்

உற்சவர் - பெரும்புறக்கடல்

தாயார்- கண்ணமங்கை நாயகி, அபிஷேகவல்லி

விருட்சம் - மகிழம்

தீர்த்தம்- தர்ஷண புஷ்கரணி

திருமங்கையாழ்வார் மங்களாசாசன  ம்   செய்தத் தலம்

பெருமாளை இத்தலத்தில் தரிசித்தவர்கள் வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்

ஒரு புண்ணியத் தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம்,ஆரண்யம்,மண்டபம்,தீர்த்தம்,க்ஷேத்ரம், நதி,நகரம் போன்ற அனைத்து லட்சணங்களும் அமையப்பெற்றதால் இத்தலத்தை சப்த புண்ணியச் சேத்திரம் என்பர்

இத்தலத்தில் நடந்த திருமால், திருமகள் திருமணத்தைக் காண அனைத்துத் தேவர்களும் குவிந்தனராம்.அவர்கள் எப்போதும் இத்தலத்தைக் காண விரும்பியதால் தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து மகிழ்கின்றனராம்.இன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது.அது எவ்வளவு காலமாக உள்லது என்பதை யாரும் அறியமாட்டார்கள்.இதில் உள்ள தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லையாம்

சிவபெருமான் நாங்கு உருவம் எடுத்து நான் கு திசையையும் இங்கு காத்து வருகிறாராம்.

பொதுவாக நான்கு கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியைசந்திக்கச் சென்றதால் இரண்டு கரங்களுடன் அருள்பாலிக்கிறார்

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார்.அதிலிருந்து தெளித்து விழுந்தஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது.அதுவே தர்ஷன் (தரிசன) புஅஹ்கரணி ஆனது.சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம்நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியைக் கண்டதும் சாபம் நீங்கியது.இங்குள்ள தாயரை இந்தத் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வதால் தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

நாலாயிரதிவ்வியபிரபந்தத்தை தொகுத்த நாதமுனிவர்க்கு திருக்கண்ணம்ங்கையாண்டான் என்ற சீடன் இருந்தார்.இவர் பெருமாளீடம் ஈடுபாடு கொண்டு கோயிலை சுத்தம் செய்து வந்தார்.ஒருநாள் நாய் வடிவம் கொண்டு ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார்.ஆகவே இத்தலம் அவர் பெயரிலேயே அமைந்தது.

பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவைத் தோன்றின.இறுதியில் மகாலட்சுமி வெளிவந்தார்.அப்போது அவர் பெருமாளின் அழகியத் தோற்றத்தைக் கண்டார்.அவரை அடைய தவம் இருந்தார்.இதையறிந்த பெருமாள் தன் மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாளை குறித்துத் தரச் சொன்னார்.முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ லட்சுமியை மணந்தார்.பெருமாள் பாற்கடலை விட்டு வந்து லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு பெருபுறக்கடல் என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தங்கியதால் இத்தலத்திற்கு லட்சுமிவனம் என்ற பெயரும்,கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம் என்ற பெயரும் ஏற்பட்டது.




28 - கபிஸ்தலம்

                               
                                 

கஜேந்திர  வரதப் பெருமாள் கோயில்

கும்பகோணம்  -  திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கபிஸ்தலம்.

மூலவர்- கஜேந்திர வரதர் (விஷ்ணு)

உற்சவர் - தாமோதர நாராயணன்

தாயார் - ரமாமணி வல்லி

உற்சவர் தாயார்_ லோகநாயகி

தீர்த்தம் - கஜேந்திர புஷ்கரணி (கபில தீர்த்தம்)

விருட்சம் - மகிழம்

திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்

கஜேந்திர வரதப்பெருமாள் ஆதிமூலம் என்றும் அழைக்கப் படுகிறார்.இங்கு புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிறார்.

கபி என்றால் குரங்கு என்று பொருள்.இத்தலத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார்...ஆகவே இத்தலம் கபிஸ்தலம் என்று பெயரைப் பெற்றது.

இந்திரஜ்யும்னன் என்ற  அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான்.ஒருசமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார்.அரசர் அவரது வருகையை அறியவில்லை.தன்னை அரசர் அவமதித்து விட்டதாகல் கோபம் கொண்ட முனிவர் "முனிவர்கலை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்" என சாபம் கொடுத்துவிட்டார்.

மன்னன் தன்னை மன்னிக்குமாறு கூற.."திருமால் மீது பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிரந்து திருமால் மூலமாக சாப விமோசனம்" அடைவாய் என்று கூறினார்.

ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன் குளத்தில் குளிக்க வருபவரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.ஒருநாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுக்க அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார்.அரக்கன், தன்னை மன்னிக்குமாறு அகத்தியரை வேண்ட திருமால் முளம் சாப விமோசனம் கிடைக்கும்" என்று கூறினார்.

யானைகளின் அரசனான கஜேந்திரன் வழக்கம் போல விஷ்ணுவை வழிபட தாமரைப் பூ எடுக்க அக்குளத்திற்குச் சென்ற போது, முதலையாக அங்கு இருந்த அரக்கன் கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டான்.காலை விடுவித்துக் கொள்ள முடியாத கஜேந்திரன், திருமாலை  வேண்டினான் "ஆதிமூலமே! என்னைக் காப்பாற்று" என அலற, திருமாலும் காட்சி தந்து முதலையை தனது சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்ரினார்.முதலை, யானை இரண்டுமே சாப விமோசனம் பெற்றன.

இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலம் கபிஸ்தலம் ஆகும்.ஆஞ்சநேயருக்கும் அருள்பாலித்தத் தலமாகும்.

Friday, June 17, 2016

26- திருக்கண்ணங்குடி

                                           


லோகநாதப் பெருமாள் கோயில்

மூலவக்ர் - லோகநாதர், சியாமளமேனி பெருமாள்

உற்சவர் - தாமோதர நாராயணன்

தாயார் - லோகநாயகி

உற்சவர் - அரவிந்தவல்லி

தீர்த்தம் - ராவணபுஷ்கரணி

விருட்சம் - மகிழம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

நாகப்பட்டினம்...சிக்கலுக்கு அருகில் அமைந்துள்ள ஊர் திருக்கண்ணங்குடி
நாகப்பட்டினம் - திருவையாறு சாலையில் சிக்கலிலிருந்து 2கிலோமீட்டர் தூரத்தில் இக்கோயில் உள்ளது.

இங்கு லாகநாதப்பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சித் தருகிறார்.

வசிஷ்ட முனிவர் வெண்ணெயால் கிருஷ்ண விக்கிரகம் ப்ன்று செய்து வழிபட்டுவந்தார்.அவரது பக்தி காரணமாக அது உருகாமல் இருந்து வந்த்து.ஒருநாள் கிருஷ்ணர் வசிஷ்டர் வீட்டினுள் சிறுவனாக நுழைந்து வெண்ணெய் விக்கிரகத்தை சாப்பிட்டு விட்டு வெளியே ஓடி விட்டார்.ஓடிய சிறுவனை வசிஷ்டர் துரத்திச் சென்றார் வசிஷ்டர்.சிறுவன் ஓடிய வழியில் சில முனிவர்கள்   ஒரு மகிழ  மரத்தடியில்   கிருஷ்ணனை தியானம் செய்து கொண்டிருந்தனர்.ஓடி வந்த சிறுவன் கிருஷ்ணன் தான் என முனிவர்கள் அறிந்தனர்.சிறுவனும் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து அவர்களுக்கு ஒரு வரம் தருவதாக சொன்னார்.முனிவர்களும் அவரை அவ்விடத்திலேயே தங்குமாறு வேண்டினார்.அவரும் அப்படியேத் தங்கி விட்டார்.

ஓடி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணனின் லீலையை அறிந்து கொண்டார்.இச்சிறப்பு நடந்ததாகக் கூறப்படும் தலம் இது.

25 - திருக்கூடலூர்

                     


ஆடுதுறைப் பெருமாள் கோயில்

புராணப்பெயர்- திருக்கூடலூர், வடதிருக்கூடலூர்,ஆடுதுறைப் பெருமாள் கோயில், சங்கம க்ஷேத்திரம்

மூலவர் - வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)

உற்சவர் - வையம் காத்த பெருமாள்

தாயார்  -  பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)

தீர்த்தம் - சக்ர தீர்த்தம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

திருவையாறிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம்.இது ஆடுதுறை பெருமாள் கோயில் மற்றும் சங்கம க்ஷேத்திரம் என்றும் அழைக்கப் படுகிறது.

கோயிலில் வரதராஜ பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சந்நதிகள் உண்டு.ராஜ கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.கோயிலுக்கு உள்ளே ஒரு மண்டபத்துத் தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்கள் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன.

கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர் வையம் காத்த பெருமாள்,உய்யவந்தார்,ஜகத்ரட்சகன் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார்.கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அந்த பெயர்.

நந்தக முனியும், தேவர்களும் ஒன்று கூடி ஹிரண்யாக்ஷணின் கொடுமையிலிருந்து பூவுலகை காக்க மகாவிஷ்ணுவை வேண்டிய காரணத்தால் இத்தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது

நந்தக முனியின் மகளான உஷை, தலப் பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மீது மையல் கொண்ட சோழ மன்னன் அவளை மணந்ததாகவும் அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களால், மன்னன் அவளைப் பிரிந்த்தாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழ காரணமாக இருந்ததாகவும், அதனால் கூடலூர் என பெயர் பெற்றதாகவும் கதையும் உண்டு

காவிரி இவ்விடத்தில் திருமாலை வணங்கி பாப விமோசனம் பெற்று இழந்த பொலிவை திரும்பிப் பெற்றாள்.அம்பரீசன்,திருமங்கையாழ்வார்,பிரம்மா, கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று வழிபட்ட புண்ணியத் தலம் இதுவாகும்.

Thursday, June 16, 2016

24 - திருக்காழிச் சீராம விண்ணகரம் (தாடாளன் கோயில்)

                                         



திரு விக்கிரன் திருக்கோயில்

இத்தலம் சீர்காழியில் உள்ளது.

மூலவர் - திருவிக்கிர நாராயணர்
உற்சவர்- தாடாளன்
தாயார்- லோகநாயகி
தல விருட்சம் - பலா
தீர்த்தம் - சங்க புஷ்கரணி, சக்கர தீர்த்தம்

ஆண்டாள், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்

உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திருவிக்கிரம அவதாரக் காட்சிகளைக் கண்ட திருத்தலம்

மூலவர் திருவிக்கிரமராக இடதுகாலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும், வலது கையை தானம் பெற்ற கோலத்திலும்,இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே காட்சித் தருகிறார்

திருவிக்கிரம கோலத்தில் ஒரு பாதத்தைத் தூக்கியபோது பாதம் நோகுமே என அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு.

திருமங்கையாழ்வாருக்கும், திருஞானசம்பந்தருக்கும் இடையிலான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால் பாராட்டி தன் வேலை திருஞானசம்பந்தர் அளித்தத் தலம்
(திருவாலி திருநகிரி திருத்தலத்தில் இவ்வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சித் தருகிறார்0

Wednesday, June 15, 2016

23 - சிதம்பரம் - திருச்சித்ரகூடம்

                                           


கோவிந்தராஜன் திருக்கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள திருக்கோயில் ஆகும்

மூலவர் - கோவிந்தராஜர்

உற்சவர்- தேவாதி தேவன், சித்திரக்கூடத்துள்ளார்
தாயார்- புண்டரீகவல்லி
விமானம் - சாத்வீக விமானம்

குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்

12 தீர்த்தங்கள் - புண்டரீக தீர்த்தம்,அமுதகூடம்,திருப்பாற்கடல்,கோடி தீர்த்தம்,கருட தீர்த்தம்,காவிரி தீர்த்தம்,சுவேத நதி தீர்த்தம்,இயம்பாகச் சேதன தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,அக்கினி தீர்த்தம்,நிர்ஜதா தீர்த்தம்,சாமி தீர்த்தம்

இத்தலத்தின் புராண பெயர் - தில்லைவனம், திருசித்ரகூடம்,புண்டரீகரபுரம்

கயிலையில் ஒரு முறை ஈசனும், பார்வதியும் ஆனந்த நடனம் ஆட, யார் சிறப்பாக ஆடினார் என தீர்ப்பு வழங்குமாறு அயனிடம் வேண்ட, அவர் தீர்ப்பளிக்கும் வல்லமை திருமாலுக்கே உண்டு என்றார்.பெருமாளோ, தன் மனதிற்கு உகந்த தில்லைவனத்தில் நடனமாடுங்கள், பார்த்துவிட்டு தீர்ப்பளிக்கிறேன் என்றார்.

தேவதச்சன் விஸ்வகர்மா, திருமாலின் ஆணைப்படி தில்லைவனமான திருசித்ரகூடத்தில் நடன சபை அமைத்தார்.

நடனம் தொடங்கே..உலகே கவனிக்கிறது.இறுதியில் ஊர்த்துவ தாண்டவத்தால் உமையை ஈசன் வெல்கிறார்.திருமாலும், வென்றது ஈசனே எனத் தீர்ப்பளிக்கிறார்.பின், சிவனின் வேண்டுதலுக்கு இணங்கப் பெருமாள் இங்கு பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார்

மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் பிரம்மா நான் கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் இருப்பார்.ஆனால் இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார்.பஞ்சபூதத் தலங்களில் ஆகாயமான இங்கு பெருமாள் வான் நோக்கிப் பள்ளிக் கொண்டிருப்பது சிறப்பு

Tuesday, June 14, 2016

22 - திருஇந்தளூர்

                                         

பரிமள ரங்கநாதர் திருக்கோயில்

மாயவரத்திலேயே அமைந்துள்ளது இத்திருத்தலம்.திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது

மூலவர் - பரிமள ரங்கநாதர், சுகந்தவன நாதர்

தாயார்- பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி

தீர்த்தம் -இந்து புஷ்கரணி

இத்தலத்தில் பெருமாள் வீரசயனத்தில் கிழக்குப் பார்த்துஅ ருள்பாலிக்கிறார்.இவரை சந்திரன் தரிசித்துள்ளார்.

நவக்கிரகத்தில் ஒன்றான சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்தைப் போக்குவதற்காக இத்தலத்தில் எம்பெருமானைக் குறித்து தவம் இருந்து நீங்கப் பெற்றதாக தலவரலாறு.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும்,230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயில் இது.வாசலில் சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.இதில் நீராடித்தான் சந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்றான்.பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதததை சூரியனும், நாபிக்கமலத்தி பிரம்மனும் பூஜிக்கின்றனர்.தலைமாட்டில் காவிரித்தாயாரும், கால்மாட்டில் கங்கைத் தாயாரும் வழிபடுகிறார்கள்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜிக்கின்றனர்.

அம்பரீசன் எனும் மன்னன் ஏகாதசி விரதத்தை பல ஆண்டுகளாக கடைப் பிடித்து வந்தான்.ஏகாதசியில் விரதம் இருந்து, துவாதசியில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான்.இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.ஆனால், தேவலோகத்திலோ தேவர்கள், அம்பரீசன் நூறாவது விரதத்தை முடித்து விட்டால் தேவலோகப்பதவி கிடைத்து விடும், மானுடனுக்கு இப்பதவி கிடைத்துவிட்டால் தேவர்களின் மரியாதை குறைந்துவிடும் என பயந்தனர்.

இதனால் தேவர்கள் துர்வாசரிடம் சென்று முறையிட, துர்வாசர் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.மன்னனின் விரோதத்தைத் தடுத்து நிறுத்த பூமிக்கு வந்தார். ஆனால், அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான்.ஏகாதசி விரதம் முடித்திருந்தாலும், துவாதசி முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும்.அப்போதுதான் முழுப்பயனும் அவனுக்குக் கிடைக்கும்.துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாரானான்.அதற்குள் துர்வாசர் வந்து விட்டார்.தன் விரதத்தைத் தடுக்க அவர் வந்துள்ளார் என மன்னன் அறியவில்லை.ஆகவே, துர்வாசரையும் தன்னுடன் உணவருந்த வேண்டினான்.முனிவர், நீராடி விட்டு வருவதாகக்  கூறிச் சென்றார்.

அவரது எண்ணம், துவாதசி முடிந்தபின்னர் வர வேண்டும் என்பதெ!

முனிவர் வர தாமதமாக...மன்ன னுக்கு தலைமைப் பண்டிதர்"உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறைகள் குடித்தால் விரதம் முடித்த முழுப்பயனும் கிடைக்கும்" என்றார்.மன்னனும் அப்படியேச் செய்தான்

இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டார்.ஒரு பூதத்தை வரவழித்து மன்னனைக் கொல்ல ஏவினார்.

பரிமளரங்கநாதரிடம் மன்னன் சென்று வேண்ட...பெருமாள் பூதத்தை விரட்டினார்.துர்வாசரும் பெருமாளிடம் மன்னிப்புக் கேட்க, பெருமாள் மன்னனிடம்"வேண்டியதைக் கேள்" என்றார்.

இத்தலத்தில் வீற்றிருந்து அனைவரையும் காக்க வேண்டும் என மன்னன் வேண்ட..பெருமாளும் தங்கி அருள்பாலித்து வருகிரார்   

Monday, June 13, 2016

21-நாதன் கோயில் (திருநந்திபுர விண்ணகரம்)


                                         

மூலவர்- நாதநாதன், விண்ணகரப் பெருமாள், யோக ஸ்ரீனிவாசன்,ஜகன்ந்தாதன்

உற்சவர்-  ஜெகன்நாதன்

தாயார்- செண்பகவல்லி

தீர்த்தம் - நந்தை தீர்த்த புஷ்கரணி

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே சுமார் 3 கல் தொலைவில் உள்ளது.பழங்காலத்தில் செண்பகாரண்யம் என்று பெயர்.மன்னார்குடியிலிருந்து இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கு :செண்பகாரண்யம்" என்று பெயர்.வீற்றிருந்த கோலத்தில் மூலவர் ஜகந்நாதன்.இறைவி செண்பகவல்லி.

இது காளமேகப் புலவர் பிறந்த ஊர்

சிவபெருமானின் வாகனமாகவும், கயிலாய மலையில் வாயிற்காப்பாலனாகவும், பூதகணங்களின் தலைவராகவும் உள்ளவர் நந்திதேவர்.சிவபக்தியில் சிறந்தவர்.இவர் அனுமதி பெற்றுவிட்டுதான் சிவாலயத்தில் சிவனை தரிசிக்க முடியும்.கயிலையில் அனுமதி இல்லாமல் இராவணன் நுழைய முற்பட்ட போது அவனுக்கும், நந்திதேவருக்கும் வாக்குவாதம் நடந்தது.அப்போது குரங்கு ஒன்றால் உன் நாடு அழிந்து போகும் என சாபமிட்டார்.

சிவனை அவமதிக்கும் வகையில் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான்.அந்த யாகசாலையில் பூத கணங்களுடன் புகுந்து அதகளம் செய்து , தட்சனின் தலை அறுபட்டு விழவும், யாகத்துக்குத் துணை போன தேவர்கள் சூரபத்மனால்  வதை படவும் சாபம் கொடுத்தார்  நந்திதேவர்

அத்தகைய நந்திதேவர் ஸ்ரீவைகுண்டம் வந்த போது அங்குக் காவலாக இருந்த துவாரபாலகர்கள் அனுமதி பெறாது உள்ளே நுழைய முயன்றார்.அவர்கள் தடுத்த போது அதைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார்.இதனால் கோபமுற்ற துவாரபாலகர்கள், நந்திதேவர் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பப்படுவாய் என சாபமிட்டனர்.அப்படியே ஆக நந்திதேவர் துடித்துப் போனார்.உடன் சிவன் அடஹ்ற்கு ஒரு தீர்வு சொன்னார், "சகலவித பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்கு தெற்கே அமைந்துள்ளது.அங்கு போய் மாகாவிஷ்ணுவை நோக்கி தவம் புரிந்து விமோசனம் பெறு' என்று.

அப்படியே நந்திதேவர் வந்து தவம் செய்து பேறு பெற்ற்தால் நந்திபுரம்,  திருநந்திபுர விண்ணகரம் என்றும் இத்தலம் பெயர் பெற்றது.
திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்றதும் இங்குதான்.திருப்பாற்கடலில் பரந்தாமனின் பாதங்களையேப் பற்றி எந்நேரமும் அவரது திருவடியிலேயே இருந்த அன்னை ஒளி வீசும் அவர் மார்பைப் பார்த்தி பிரமித்தார்.தான் எந்நாளும் அங்கு வாசம் செய்ய வேண்டும் என விரும்பினார். அதற்காக செண்பகாரண்யம் எனப்படும் இத்தலம் வந்து திருமாலை வேண்டி கடும் தவம் செய்தார்.பாற்கடலில் திருமகளைப் பிரிந்து தனித்திருந்த திருமாலும் அவருக்குக் காட்சியளித்தார்.அன்னை மனம் மகிழ்ந்தாள். "உம் விருப்பப்படி எம் மார்பில் இனி உறையும்" என ஆசிர்வதித்தார்.கிழக்கு நோக்கி திருமகளை எதிர் கொண்டதால் இங்கு பெருமாள் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

சிபி சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்ததும் இத்தலமேயாகும்.தன்னிடம் அடைக்கலம் அடைந்த புறாவிற்காக ,அதன் எடைக்கு சமமாக தானே தராசின் மறுதட்டில் அமர்ந்து, தன்னை காணிக்கை ஆக்கியவருக்கு பெருமாள் காட்சி தந்தார்.





Saturday, June 11, 2016

20 - நாச்சியார் கோயில்

                                               

கோயிலின் பெயரே ஊரின் பெயராக அமைந்திருக்கும் ஊர்களில் நாச்சியார் கோயிலும் ஒன்று.கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும், மணம் கமழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்பதாகும்.

நாச்சியார் கோயில், சோழர் காலத்தில் கிபி 5ஆம் நூற்றாண்டு கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டது, சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரே வைணவக் கோயில் இதுதான். இது ஒரு மாடக்கோயில் (யானை ஏறமுடியாது)

இக்கோயில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏற வேண்டும். இத்தலத்தில் வஞ்சளவல்லி தாயாருக்கே முதலிடம்..ஆதாலால் நாச்சியார் கோயில் என்றானது.மேதாவி என்னும் மகரிஷியின் தவப்பயனால் வஞ்சளமரத்தடியில் கிடந்த குழந்தையே வஞ்சளவல்லி ஆனாள்.

வஞ்சளவல்லி பருவம் அடைந்ததும் எம்பெருமான் தன் ஐந்து அம்சமான, சங்கர்ஷணன்,ப்பிரத்யும்னன்,அநிருத்தன்,சாம்பன், மற்றும் வாசுதேவன் ஆகிய ஐந்து உருவங்களில் மகரிஷியின் குடிலுக்கு வந்து விருந்துண்டு கைகழுவும் போது நீர் கொடுத்த வஞ்சளவல்லியின் கைப்பிடிக்க, அதைப்பார்த்த மகரிஷி கோபம் கொண்டு சாபம் கொடுக்கும் நிலையில் ஐவர் ஒருவராகி வஞ்சளவல்லியை கரம் பிடித்தார்.மகரிஷியை ஏறிட்டு இரந்து நின்ற கோலத்தில் காட்சி தந்தார்.இதே கோலத்திலேயே கருவறையில் காட்சி தருகிறார்.

இங்கு கருட சேவை புகழ் பெற்றது.இவ்விழா, மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும்.இந்நிகழ்வின் போது 4டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிவுலா வருவார்.இதில் சிறப்பு என்னவெனில், இவ்வளவு எடையுள்ள சிலையை முதலில் நாங்கு பேர்ம் பின்னர் 8-16-32-64-128 பேரும் தூக்குவார்கள்.முதலில் நால்வரால் மட்டுமே தூக்க முடிந்த சிலை கோயிலைவிட்டு வரும்போது 128 பேர் இல்லாவிட்டால் தூக்கமுடியாது.இந்நிகழ்ச்சி முடிந்ததும் கோயிலுக்கு சிலையை எடுத்துப் போகும் போது இதே 128-64-32-16-8 என முடிந்து 4 பேற் மட்டுமே கோயிலுக்குள் எடுத்துச் செல்வர்.

Friday, June 10, 2016

19 - திருநாகை

                                           


சவுந்தரராஜப்பெருமாள் கோயில்

பெருமாள் - சௌந்தரராஜ பெருமாள்
உற்சவர்- சவுந்தரராஜன்
தாயார் - சவுந்தரவல்லி
உற்சவர் - கஜலட்சுமி
தலவிருட்சம்- மாமரம்
தீர்த்தம் - சார புஷ்கரணி

புராணப் பெயர்கள் - சௌந்தர்ய ஆர்ணயம், சுந்தராரண்யம்

மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்லும்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த இடம்

இத்தலத்தில் பெருமாள் நின்று,கிடந்த இருந்த கோலத்தில் நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.ஒருகை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது.மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.

பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் திருமஞ்சன திருமேனியுடன் காட்சி தருகிறார்.இங்குள்ள விமானம் சௌந்தர்ய விமானம்.இங்கு ஆதிக்ஷேஷன், துருவன், திருமங்கையாழ்வார்ம்சாலிசுகசோழன் ஆகியோர் பெருமாளைத் தரிசித்துள்ளனர்.

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டால் ஆன மாலை பெருமாளின் இடையை அலங்கரிக்கிறது.ஆதிக்ஷேஷனால் உருவாக்கப்பட்ட சாரபுஷ்கரணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

கண்டன்,சுகண்டன் என்று இரு சகோதரர்கள் செருக்குடன் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.அவர்கள் சாரபுஷ்கரணியில் நீராட பாவம் தீர்ந்து வைகுண்டம் சென்றார்கள்.இவர்களது சிற்பங்கள் பெருமாள் சந்நிதியில் உள்ளன.

உத்தானபாத மகராஜனின் குமாரன் துருவன் சிறுவனாய் இருந்த போது, நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான்.உலகமே தனக்கு அடிமையாக வேண்டும் என பெருமாளை தரிசித்து தவம் செய்தான்.பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகுடன் அவனுக்குத் தரிசனம் தந்தார்.பெருமாளின் அழகில் மயங்கிய துருவன் தான் கேட்க இருந்த வரத்தை மறந்தான். இறைவனது அழகே பெரும் சுகம். எப்போதும் அதை தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் என்று கேட்டான்.பெருமாள் தனது சௌந்தர்யமான கோலத்தை துருவனுக்குக் காட்டி அவன் தங்கியிருந்த தலத்திலேயே தங்கினார்.சௌந்தரராஜ பெருமாள் ஆனார்.

நாகங்களுக்குத் தலைவனான ஆதிஷேசன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சார புஷ்கரணி எனப் பெயரிட்டான்.அதன் கரையில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவம் செய்தான். பெருமாளும் மகிழ்ந்து தன் படுக்கையாக ஆதிக்ஷேசனை ஏற்றார்.பெருமாலை நாகம் (ஆதிக்ஷேசன்) ஆராதித்ததால் ஊருக்கு நாகப்பட்டினம் என்ற பெயர் வந்தது. 

Thursday, June 9, 2016

18 - திருவாலி - திருநகிரி

                                         

திருவாலி - அழகியசிங்கர் திருக்கோயில்

மூலவர் - அழகியசிங்கர் (லட்சுமி நரசிம்மன்)
உற்சவர்- திருவாலி நகராளன்
தாயார் - பூர்ணவல்லி (அம்ருதகடவல்லி)
தீர்த்தம்- இலாட்சணி புஷ்கரிணி

நாகபட்டினம் மாவட்டத்தில் திருவாலியில் இக்கோயில் அமைந்துள்ளது.குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது

இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மன்,மங்கைமடம் வீர நரசிம்மன், திருநகிரி யோக நரசிம்மன் மற்றும் மற்றொரு நரசிம்மத் தலமான ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்கள் உள்ளன.இத்தலத்தில் மூலவர் சந்நிதியில் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும்.இங்கு திருமங்கையாழ்வார் இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

பத்ரிகாசிரமத்திற்கு அடுத்த்தாக பெருமாள் திருமந்திரத்தைத் தானே உபதேசம் செய்த இடமாதலால் பத்ரிக்கு இணையானது இத்தலம். லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம தீர்த்தம்" என்ற பெயரும் உண்டு.திருவாலியையும் தரிசிப்பதால் இங்கு பஞ்ச நரசிம்ம தலங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை வேண்டினாள்.பெருமாள் கூறியபடி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாகப் பிறந்தாள்.பெருமாளைத் திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழி மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள், திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இதை முன்னிட்டு ஆண்டுதோறும் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடதி...மந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார்.இதனால் பயந்து பொன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமிதேவியை வேண்டினர்.அவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார்.எனவே, இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்றது..அதுவே நாளடைவில் திருவாலி ஆனது

திருமங்கையாழ்வார் குறுநில மன்னனாக இங்கு திகழ்ந்ததால் அவர் பெயர் ஆலிநாடன் ஆயிற்று.

திருநகிரி
----------------------

மூலவர் _ தேவராஜன்
உற்சவர்- கல்யாண ரங்கராஜன்
தாயார்- அமிர்தவல்லி
தீர்த்தம்- இலாக்ஷ புஷ்கரிணி

நாகப்பட்டினம் தலத்திலுள்ள மற்றொரு ஊர் திருநகிரி

குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள தலம்

திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சந்நிதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார்.இவருக்கு எதிரே ஒரு கொடி மரமும்,பெருமாளுக்கு எதிரே ஒன்றும் ஆகிய இரு கொடிமரங்கள் இத்தலத்தில்

பிரம்மாவின் புத்திரன் பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான்.அவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால் லட்சுமி கோபம் கொண்டு இத்தலத்தில் இருந்த தாமரை மலருகுள் ஒளிந்து கொண்டாள்.பெருமாள்ல்த லட்சுமியைத் தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார்.அருகிலுள்ள திருவாலியும் இதே போல ஆலிங்கனகோலத்தில் இருப்பதால் இரண்டும் சேர்ந்து திருவாலி-திருநகிரி ஆயிற்று.

திரேதா யுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக இத்தலத்தின்  புஷ்பீக விமானத்தில்  வரும்போது பறக்காமல் விமானம் அப்படியே நின்று விட்டது.எனவே இத்தலம் புண்ணியமான தலம் எனக் கருதி தனக்கு மோட்சம் கிடைக்க பெருமாளிடம் வேண்ட, கிடைக்கவில்லை.

அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான்.அப்படியாயினும் தனுக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என்றார்.

கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனனின் மகனாகப் பிறந்தான்.இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய எண்ணினான்.அவளோ, ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் உங்களுக்கு மனைவி ஆவேன்" என்றாள்.இந்த அன்னதானத்திற்கான பொருள் தீ ர்ந்தபடியால் நீலன் வழிப்பறியில் ஈடுபடலானான்.

அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியைத் திருமணம் செய்துக் கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வந்த போது நீலன் மறித்து வழிப்பறி செய்ய, பெருமாள் நீலனுக்கு அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்டார்.

இத்தல வரலாறும், திருவாலியின் வரலாறும் ஒரே வரலாறு

17 - திருக்கண்ணபுரம்


                                       


சவுரிராஜப் பெருமாள் கோயில்

மூலவர் - நீலமேகப் பெருமாள்
உற்சவர்- சௌரிராஜப் பெருமாள்
தாயார்- கண்ணபுர நாயகி
தீர்த்தம் - நித்திய புஷ்கரணி

பெரியாழ்வார்,ஆண்டாள், குலசேகர ஆழ்வார்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்

நன்னிலம்- காரைக்கால் பாதையில் அமைந்துள்ளது திருக்கண்ணபுரம்

இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக்கரத்துடன் இல்லாது தானம் பெறும் கரத்துடன் உள்ளார்.பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக் கொள்கிறார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்ச விழாவில், அதிகாலையில் சிவனாகவும், மாலையில் பிரம்மனாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சி தரும் மும்மூர்த்திகள் தரிசனம் இங்கு சிறப்பு.

வைகாசி, மாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவம் இங்கு சிறப்பு.மாசி மாதம் பௌர்னமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும்.காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜ பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளைமண்டபம் பகுதியில் அலங்காரம் செய்யப் படுகிறது.மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாக தொங்க விடப்படுகின்றன.பவளக்கால் சப்பரத்தில் தங்க கருட வாகனத்தின் மீது  பெருமாள் அமந்திருப்பார்.பட்டினச்சேரி மீனவ மக்கள் சௌரைராஜப் பெருமாளை மாப்பிள்ளைப் பெருமாள் என்று அழைக்கின்றனர்.

ஒருநாள் இக்கோயில் அர்ச்சகர் கோயிலுக்கு வந்த அரசனுக்கு, சுவாமி மீது சூடிய மாலையைத் தர, அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது.இதனால் அரசன் கோபமடைய, அர்ச்சகர் அது பெருமாளின் முடி என்றார்.அரசனோ, அடுத்த நாள் தான் வந்து பார்க்கையில் பெருமாள் முடியில்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்கு உள்ளாவார் என் கிறான்.அர்ச்சகர், பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்ட, அவரிடம் இரக்கம் கொண்ட பெருமாள். அவரைக் காப்பாற்ற எண்ணினார்.அரசர் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலைமுடி இருந்தது.இந்நிகழ்ச்சியின் காரணமாக உற்சவர் சௌரிராஜப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.உற்சவர் உலா வரும் அமாவாசை அன்று திருமுடி தரிசனம் காணலாம்.

இக்கோயிலில்சிறப்புப் பிரசாதம் பொங்கல் ஆகும்.அதற்கும் ஒரு வரலாறு உண்டு.திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்த முனையதரையர் எனும் பக்தர் திருப்பணிகளை செய்து வந்த போது பஞ்சம் ஏற்பட்டதாம்.அவரோ, பெருமாளுக்கு படைக்காமல் ஏதும் உண்ணமாட்டார்.எனவே, வீட்டில் உள்ள பொங்கலை அவரது மனைவி இறைவனுக்கு மானசீகமாக படைத்து வழிபட, திருக்கோயிலைத் திறக்கும் போது பொங்கல் மணம் வீசுவதையும், முனையதரையர் வீட்டில் பொங்கல் சிதறிக் கிடப்பதையும் கண்டு அடியார் வீட்டு பொங்கலை இறைவன் ஏற்றுக் கொண்டார் என அறிந்தனர்.

அரிசி ஐந்து பங்கு, பாசிப்ப்யிறு முழுப்பயிரு ஐந்து பங்கு. இரண்டு பங்கு வெண்ணெய் உருக்கிய நெய் மற்றும் உப்பு கலந்து த்யாரிக்கப் படுகிறது பொங்கல். மிளகு, சீரகம் கிடையாது.

வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த காளமேகப் புலவர் சைவராக மாறியதும்...பெருமாளுக்குக் கோபம் ஏற்பட்டதாம்.ஒருநாள் கண்ணபுரம் கோயிலில் மழைக்காக காளமேகம் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லையாம்.உடனே காளமேகம் ஒரு பாடல் பாட கதவுகள் திறந்ததாம்.அப்பாடல்...

கன்னபுர மாலே கடவுளிலு நீதியகம்
உன்னிலுமே யானதிக மொன்றுகேள்- முன்னமே
உன்பிறப்போ பத்தாம்முயர் சிவனுக் கொன்றுமில்லை
என்பிறப் பெண்ணைத் தொலையாதே

திருக்கண்ணபுரம் கோயிலில் குடியிருக்கும் பெருமாளே! நான் சொல்வது ஒன்று கேள். எல்லாக் கடவுளிலும் நீதான் பெரியவன்.உன்னைக் காட்டிலும் நான் பெரியவன்.

உனக்கு பத்தே பத்து பிறப்புதான்.சிவனுக்கோ ஒன்று கூட இல்லை.எனக்கோ எண்ணமுடியாத பிறப்பு.அதனால் நான் பெரியவன்.(எதுகை நோக்கிக் கண்ணபுரம் கன்னபுரம் ஆனது பாடலில்)

Wednesday, June 8, 2016

16 - திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்)

                             


மூலவர்- உப்பிலியப்பன் (ஒப்பிலியப்பன்)
உற்சவர்- பொன்னப்பன்
தாயார்- பூமாதேவி
தீர்த்தம்- அகோராத்ர புஷ்கரணீ

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் திருத்தலம்.

கும்பகோணத்திலிருந்து தெகிழக்கே காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளத் தலம் இது.திருநாகேஷ்வரம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
மார்க்கண்டேய மகரிஷி,காவிரி,கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர் இப்பெருமாள்.இத்தலத்திற்கு செண்பகவனம்,ஆகாச நகரம்,திருவிண்ணகர்,மார்க்கண்டேய க்ஷேத்திரம்,ஒப்பிலியப்பன் கோயில், தென் திருப்பதி ஆகிய பெயர்களும் உண்டு.

நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி தந்துள்ளார் எம்பெருமான்.அவை, பொன்னப்பன்,மணியப்பன்,முத்தப்பன்,என்னப்பன்,திருவிண்ணகப்பன்.

மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி தனக்கு மகளாகவும், திருமால் மாப்பிள்ளை ஆகவும் ஆக வேண்டும் என கடுந்தவம் செய்தார்.அப்போது துளசி வனத்தில் அழகிய பெண்குழ்ந்தையைக் கண்டு அதற்கு பூமா தேவி எனப் பெயர் வைத்து வளர்த்து வந்தார்.பூமாதெவி திருமண வயதை எட்டிய போது, வயது முதிர்ந்த முதியவர் வேடம் பூண்டு பெருமாள் , மார்க்கண்டேய மகரிஷி முன் வந்து அவரது பெண்ணை டஹ்னக்கு மணம் முடிக்க வேண்டினார்.

வந்தது முதியவர் என்று அறியாத மகரிஷி, வயதான ஒருவருக்கு தன் பெண்ணை மணம் முடிக்க மறுத்து..சால்ஜாப்புகளைச் சொன்னார்.மார்க்கண்டேய ரிஷி, என் பெண் சிறியவள்.அவளுக்கு உப்பு போட்டுதான் சமைக்க வேண்டும் என்று கூட அறியாதவள் என்றார்

திருமால் விடவில்லை.செய்வதறியாது கண்களை மூடி பெருமாளை வேண்டிய போது உப்பிலியப்பன் தோன்றி "உன்னிடம் வளர்ந்தது பூமாதேவி" என்று கூறி மணம் முடித்தார்.மார்க்கண்டேயர் விருப்பமும் நிறைவேறியது.

பூமாதேவியை மணந்து உப்பில்லாமல் அவள் சமைத்த சமையலை உண்டதால் உப்பிலியப்பன் என்றும் பெயரானது.இன்றும், பெருமாளுக்கு உப்பில்லா பிரசாதமே படைக்கப் படுகிறது.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு இருப்பது போல இப்பெருமாளுக்கும் தனி சுப்ரபாடஹ்ம் உண்டு.

(லட்சுமியின் அம்சமான பூமாதேவி ஒரு சமயம் பெருமாளிடம், 'எப்போதும் மகாலட்சுமியையே மனதில் தாங்கிக் கொண்டு இருக்கறீர்கள்.எனக்கும் அந்த பாக்கியத்தை அருளுங்கள் என்றாள்.ஆகவே, பூமா தேவியை குழந்தையாக துளசிவனத்தில் கிடத்தி, மார்க்கண்டேயரால்  துளசி என பெயர் வைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு அவளை மணந்தார் யாருக்கும் ஒப்பில்லா ஒப்பிலியப்பன் .மணந்தபின் துளசிமாலையாக மார்பில் அணிந்தார்.ஆகவேதான் இன்றும் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு துளசிமாலை அணிவிப்பது வழக்கமாய் உள்லது என்றும் கூறுவர்) 

Tuesday, June 7, 2016

15 - கண்டியூர்


                                   

ஹரசாப விமோசன பெருமாள் - கமலநாதன்

உற்சவர் - கமலநாதன்
தாயார்- கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்- கபால மோட்ச புஷ்கரிணி

புராண பெயர் - கண்டன க்ஷேத்திரம், பஞ்சகமல க்ஷேத்திரம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.இத்தலத்தில் பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இத்தல இறைவன் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.இவர் சந்நிதியில் மேல் உள்ள விமானம் கமலாக்ருதி விமானம் எனப்படுகிறது. அகத்தியர், இத்தல இறைவனை தரிசனம் செய்துள்ளனர்

சிவனுக்கு, ஈசானம், தத்புருஷம்,அகோரம்,வாம தேவம்,சத்யோஜாதம் என ஐந்து திருமுகங்கள் உண்டு.இதுபோல பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது.அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தான்.இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளி எறிந்தார்.இந்த பிரம்மஹத்தி தோஷத்தைத் தொலைக்க கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார்.ஒரு இடத்தில் அந்த கபாலம் வீழ்ந்தது.அங்கே விஷ்ணு இருந்தார்.அந்தத் தலமே பூர்ணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலாகும்.

சிவனின் சாபம் தீர்ந்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார்.இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது.இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார்.அவருக்கு கண்டீஸ்வரர் எனப் பெயர்.

பிரம்மனுக்குக் கோயில் கிடையாது என்பதால் கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதரமாக பிரம்மன் உள்ளார். 

Monday, June 6, 2016

14 - கும்பகோணம் (சாரங்கபாணி சுவாமி கோயில்)

 
                                    சாரங்கபாணிக் கோயில் தேரோட்டம் (உள்படம்- சாரங்கபாணி)


ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாகப் போற்றப்படும் இத்திருத்தலத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தம் விளைந்ததாகக்  கருதப்படும் பெருமையை உடையது.ஆழ்வார்கள், இப்பெருமாளை குடந்தைக் கிடந்தான் என வர்ணயிக்கின்றனர்.இக்கோயிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. (மற்றவை ஸ்ரீரங்கப்பட்டிணம்,ஸ்ரீரங்கம்,திருப்பேர் நகர்,மயிலாடுதுறை)

கும்பகோணத்தில் உள்ள மிகப்பழைமையான கோயில் இது.இக்கோயிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது.அதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும் கல்லால் ஆனவை.இக்கல்தேர் ஒரு சிறந்த, அற்புத கலைப்படைப்பு எனலாம்.இக்கோயிலின் மற்ற சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லின் சிறப்புப் பெயராகும்.பாணி என்றால் கையில் ஏந்தியவன் என்று பொருள்.

தவிர்த்து, சாரங்கம் என்பது பல பொருள்களையுடைய சொல்லாகும்.சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவன் என்றும் பொருள் கொள்ளலாம்.சாரங்கபாணி என்பது நேராக திருமாலைக் குறிக்காது.ஆனாலும்..சார்ங்கபாணி என பெருமாளை உச்சரித்த மக்கள் சாரங்கபாணி என்றே அழைக்க ஆரம்பித்தனர் எனலாம்

இக்கோயிலின் முன்மண்டபத்து தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர மன்னர் விருப்பண்ண உடையாருக்கு உரியதாகும்.இக்கல்வெட்டின் காலம் கிபி 1385. இக்கல்வெட்டில்தான் முதன்முறையாக இவ்வூர் கும்பகோணமென உள்ளதெனலாம் (குடந்தை என்பதே இதன் பெயராகும்)

மூலவர் - சாரங்கபாணி(ஆராவமுதன்)
உற்சவர்- நான் கு   திருக்கைகளுடன் , சங்கு, சக்கரம்,கதை, சார்ங்கம் என்னும் வில்,உடைவாள் ஆகிய ஐந்து ஆயுடஹ்ங்களுடன், வலது கை அபயமளிக்கும் முத்திரையுடன் கம்பொன் சுடராக வேறு எங்கும் காணக்கிடைக்கா அழகுடன் காணப்படுகிறார்.

மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்தரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
நாபியில் பிரம்மா...தலைப்பகுதியில் சூரியன்
கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தாயார் - கோமளவல்லி

தீர்த்தம் - ஹேமவல்லி புஷ்கரிணி. காவிரி, அரசலாறு

பன்னிரு ஆழ்வார்கள், ஆண்டாள், திருமழிசையாழ்வார்,திருமனகையாழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோர் இப்ப்ருமாளைப் பாடியுள்ளார்கள்

பெரியாழ்வார்....

தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழா நின்ற ஆயர்தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி
குடந்தை கிடந்தானே சப்பாணி

    என பாடியுள்ளார்.

இக்கோயிலின் தேர் சித்திரைத் தேர் என அழைக்கப்படுகிறது.தமிழகத்துக் கோயில்களில் இது மூன்றாவது பெரிய தேர் ஆகும்

திருவாரூர் ஆழித்தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கு இணையாகப் புகழ் பெற்றது.இதன் எடை 500 டன்.அடிப்பாகம் 25 அடி.மேல்தட்டு 35 அடி, உயரம் 30 அடி.அலங்கரிக்கும் போது தேர் 110 அடியாகும்.11 நிலைகளைக் கொண்டது இத்தேர்

13 - திருத்தலைச்சங்காடு

இத்தலத்தில் இறைவன் 3அடி உயரத்தில் சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தைன் மயிர்க்கால்கள் தெரியும்.

                               

அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்


ஒரே சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் தரிசங்கம் இங்குக் கிடைக்கிறது.சங்கநிதி,பதுமநிதி இருவரும் கோயில் நுழைவாயிலில் வரவேற்கின்றனர்.கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டியுள்ளான்.அதில் யானை நுழைய முடியாத அளவிற்கு கோயில்களும் கட்டியுள்ளான்.அப்படிப்பட்ட மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.கோயில் அமைப்பே சோமஸ்கந்தர் அமைப்பில் உள்ளது.அதாவது, கோயிலில் இடது பக்கம் சிவன் சந்நிதி,நடுவில் முருகன் சந்நிதி, வலப்பக்கம் அம்மன் சந்நிதி.

மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களைக் காக்க சங்கரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமான சங்கைப் பெற்றார்.இத்தலத்தில் மகாவிஷ்ணுவிற்கு தனி சந்நிதி உண்டு.

தலைச்சங்காடு  அல்லது திருதலைச்சங்கநாண்மதியம் எனப்படும் இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பழந்தமிழர்கள் இயற்கை தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும், அதனைச் சார்ந்த உறுக்கும் பெயரை வைத்திருக்கின்றனர்.எனவே தலை+சங்கு+காடு = தலைச்சங்காடு. சங்கு பூக்கள் மிகுதியாகத் தோட்டத்தில் பயிரிட்டு கோயில்களுக்கு அனுப்பப்பட்டதால் இப்பெயர் என கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

திருமால், உலக உயிரைக் காக்க சங்காரண்யேஸ்வரரை பூஜித்து தனது ஆயுதமாக சங்கைப் பெற்றுள்ளார்.திருமாலுக்கு,பாஞ்சசன்யம் எனும் சங்கினை வழங்கியக் காரணத்தால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதன் என அழைக்கப்படுகிறார்.

திருமங்கையாழ்வார் இக்கோயில் பற்றி இரு பாசுரங்கள் எழுதியுள்ளார்.

மூலவர் - நாண் மதியப் பெருமாள் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்)
உற்சவர்- வெண்சுடர்ப் பெருமாள்
தாயார்-தலைச்சங்க நாச்சியார்  (சவுந்தர நாயகி)
உற்சவர் தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்- சங்கரபுஷ்கரணி 

Sunday, June 5, 2016

12 - திருச்சேறை

                                     

சாரநாதப் பெருமாள் கோயில்

கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.கும்பகோணத்திலிருந்து, திருவாரூர் செல்லும் பேருந்துகள் இதன் வழி செல்லும்.

இக்கோயில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனலாம்.
380 அடி நீளமும் 234அடி அகலமும் கொண்டுள்ளது.கிழக்கு நோக்கியுள்ள ராஜகோபுரம் 90அடி உயரமானது.எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்குக் கரையில் அகத்தியர்,பிரம்மா,காவிரி,ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.உள்சுற்றில் ஸ்ரீனிவாச பெருமாள்,நம்மாழ்வார்,உடையவர்,கூரத்தாழ்வார், ராமர்,அனுமான், ராஜகோபாலன்,ஆண்டாள்,சத்திய பாமா,ருக்மணி,நரசிம்ம மூர்த்தி,பாலசாரநாதர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

மூலவர் சாரநாதர் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக உள்ளார்.இக்கோயிலில் மட்டுமே பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி, லட்சுமி,சாரநாயகி, நீளாதேவி என ஐந்து தேவியருடன் கணப்படுகிறார்.இத்தலத்து மண் மிகவும் சாரம் (சத்து)  நிறைந்தது எனவும்..அதனாலேயே சாரநாதர் ஈன் பெருமால் அழைக்கப்பட்டார் என்றும் வரலாறு.திருச்சாரம் மருவி திருச்சேறை ஆனது.மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயனும், இடது பக்கம் காவிரித்தாயும் அமைந்துள்ளனர்.

ஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த  மகாவிஷ்ணு, பிரம்மனை அழைத்து பிரளய காலம் வருகிறது.நீ பூலோகம் சென்று ஒரு புண்ணியத் தலத்தில் மண்ணெடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் எனக் கட்டளையிட்டார்.

பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்த வண்ணம் இருக்க, மகாவிஷ்ணுவை பிரம்மன் வேண்ட, திருமால், பூலோக முக்கியத் தலங்களில் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்தத்தில் நீராடி, மண் எடுத்து செய் என்றார்.

பிரம்மனும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார்.

இதத்தவிர்த்து காவிரித்தாயின் தவத்தின் பயனாக பெருமாள் அவரது மடியில் குழ்ந்தையாக திகழ்ந்ததோடு அல்லாது அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி,நீளாதேவி, மகாலட்சுமி,சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்தத் தலம் என்பதும் மரபு வழி வரலாறாகும்

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் தஞ்சையைஅ அண்ட நாயக்க மன்னன், மன்னார்குடியில் ராஜகோபால சுவாமிக்கு ஒரு கோயில் அமைக்கத் தீர்மானித்தார்.அதற்கான பொறுப்பை தன் அமைச்சரான
நரச பூபாலனிடம் அளித்தார்.பூபாலன், சாரநாதரின் பக்தர்.திருச்சேறையில் கோயில் அமைகக் விரும்பிய அமைச்சர், மன்னார்குடிக் கோயிலுக்கு கற்களை கொண்டு செல்லும் வண்டிகள், ஒவ்வொன்றிலும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிடும்படிக் கூறினான்.இதையறிந்த மன்னன் கோபத்துடன் திருச்சேறை சென்றான்.அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதர்...ராஜகோபாலனாய்க் காட்சியளித்தார் என்பதும் இத்தலம் குறித்து மரபு வழி வரலாறாகும்

ஒருமுறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என்று கேட்டு, இத்தல சாரபுஷ்கரணியில் மேற்குக் கரை அரசமரத்தடியில் தவம் இருந்தாள். பெருமாள் மகிழ்ந்து, குழ்ந்தைவடிவில்
காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார்.பின் கருட வாகனத்தில் சங்கு, சக்கரதாரியாக ஐந்தௌ லட்சுமிகளுடன் காட்சித் தர, காவிரியும், எப்போதும் இதுபோலக் காட்சியளிக்க வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார்.மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு  இடப்பக்கத்தில் காவிரித்தாய் இருப்பதைக் காணலாம்.

திருமங்கையாழ்வார் இத்தலம் குறித்து பாசுரங்கள் பாடியுள்ளார்.

மூலவர்   - சாரநாதர்
தாயார்.- சாரநாயகி
தீர்த்தம்- சார புஷ்கரணி
உற்சவர்- ஸ்ரீசாரநாதப் பெருமாள்

Saturday, June 4, 2016

11 - சிறுபுலியூர்

                                     

நாகப்பட்டிணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது சிறுபுலியூர்.

கருடனும், அனந்தனும் மாற்றாந்தாய் மக்கள்.பெருமாளுக்கு பரமபதத்தில் கைங்கரியம் செய்யும் நித்யசூரிகள் ஆயினும் பகைவர்கள்.சிறுபுலியூர் திவ்விய தலத்தின் தலவரலாறு கருட-நாக பகையை அடிப்படையாகக் கொண்டது.

பகவான் ஸ்ரீநாராயணனை சயனத்தில் தான் தாங்குவதாக ஆதிசேஷனும், அவரை எல்லா இடங்களுக்கும் தாமே சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம்  ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே போட்டியும், பொறாமையும் வளர்ந்து பகையாக மாறியது.

ஆதிசேஷன் இப்பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார்.அத்தவத்திற்கு இரங்கி பெருமான் ஆதிசேஷன் மடியில் சயனம் கொண்டு சிறுகுழந்தையாக பால சயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.அதாவது பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிக் கொண்டிருக்கும் கோலம்.கருடனுக்கும் அபயமளித்த தலம்.இத்தலத்தில் உயரத்தில் ஆதிசேஷனும், பூமிக்குக் கீழே கருடன் சந்நிதியும் அமைந்துள்ளது.

(கருடா சௌக்கியமா? என்றதற்கு, அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட தலமாகக் கொள்ளலாம்)

சலசயனம், பாலவியாக்ரபுரம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு சிறுபுலியூர் என்ற பெயர் ஏன்?
வியாக்ரபாரதர்  என்ற முனிவர்...சிதம்பரத்தில் தவம் செய்து தனக்கு மோட்சம் கிடைக்க வேண்டினார்.மோட்சம் கிடைக்க வல்லுநர் பெருமாளே என நடராஜர் கூற..அவ்வாறாயின் அதற்குரியத் தலத்தை காண்பிக்குமாறு முனிவர் வேண்டினார்.நடராஜர், சிவலிங்க ரூபமாக வழி காட்ட..அவரை விரைந்து பின்பற்ற தான் பெற்ற தவ வலிமையால் முனிவர் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து முக்தி பெற்றார் என்றும் , அதனால் சிறுபுலியூர் என அழைக்கப் படுவதாக சொல்வர்.

பெருமாளைக் கண்டு, அந்த பிரம்மாண்டமான தோற்றம் பார்த்து வியாக்ரபாரத முனிவர் பிரமிப்பு அடைந்தார்.அந்தப் பரம்பொருளை எப்படி முழுமையாகக் கண்களால் காணமுடியும்? எப்படிக் கரங்களால் தீண்டி இன்புற முடியும்?

அவரது தர்ம சங்கடத்தைக் கண்ட பெருமாள் அவருக்கு அருள் வழங்கும் வண்ணம்  தன்னை சுருக்கி கொண்டார்.

புலியாருக்காக சிறுவடிவு எடுத்து பெருமாள் மாறியதாலும் சிறுபுலியூர் என அழைக்கப்பட்டிருக்கலாம்.

இச்சிறு கோலத்திலும், தன் நாபிக்கமலத்தில் பிரம்மனைத் தாங்கியுள்ளார்.திருவடிக்கு அருகே ஸ்ரீதேவியுடன், சிறுவடிவில் புலிக்கால் முனிவரும், கண்வ முனிவரும் காட்சி தருகிறார்கள்.

மூலவர்- சலசயனப் பெருமாள் . தெற்கே திருமுக மண்டலம்..புஜங்க சயனம்

உற்சவர் -கிருபா சமுத்தியப் பெருமாள்

தாயார் - திருமாமகள்  நாச்சியார்

உற்சவர் - தயாநாயகி

தீர்த்தம் - மானச புஷ்கரணி

108 திவ்வியத் தலங்களில் பெருமாள் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்தத் தலங்கள் இரண்டு.

முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப்பெரிய வடிவத்தில் அனந்தசயனத்தில் சேவை சாதிக்கிறார்

இரண்டாவது தலமான இங்கு...பால சயனத்தில் குழந்தை வடிவனாக சேவை செய்கிறார்.

பிரம்மாண்டமான பெருமாள், புலிக்கால் முனிவருக்காக தன்னை சுருக்கிகொண்டது திருமங்கையாழ்வாருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாம்.அவரை சமாதானப்படுத்த, பெருமாள் அசரீரியாக "நீ பார்க்க விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக!? என்று அருளினார்.

திருவனந்தபுரத்தில், தலையை இடது ஓரத்துக்கும் வலது ஓரத்துக்குமாக அசைத்து திருமாளை தரிசிக்க வேண்டிய நிலையில், திருக்கண்ணமங்கலத்தில் தலையை கீழிருந்து மேலாக கழுத்தை வளைத்து தரிசிக்க வேண்டியது அவசியம்.

Friday, June 3, 2016

10 - திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

                                                   


தேவாதிராஜன் கோயில்

ஒருமுறை பெருமாளும், சிவனும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தார்.காய் உருட்டும் போது நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு சாதகமாகக் கூற சிவனுக்குக் கோபம் வந்து பார்வதியை பசுவாக மாறும் படி சாபமிட்டார்.துணைக்கு சரஸ்வதியும்,லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள்.இவர்களை மேய்ப்பவராக பெருமாள் "ஆ"மருவியப்பன் என்ற நாமத்துடன் இத்தலத்தில் ஆட்சி புரிகிறார்.

மூலவர் பெருமாள் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர்.மூலஸ்தானத்தில் பார்வதி பசுரூபத்தில் உள்ளனர்.மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற ஆ மருவியப்பனை வணங்கினார்.அத்னால் அவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.பக்த பிரஹலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார்.மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாவிக்கின்றனர்.மூலவர் மேல் உள்ள விமானம் கருட விமானம்.தர்ம தேவதை,உபரிசரவசு,காவிரி, கருடன்,அகத்தியர் ஆகியோர் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

இத்தலத்தில் திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.இக்கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது.அங்குதான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது.

இத்தலத்தில்தான் கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்தார்.

உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேரில் வரும் போது, அதன் நிழல் எதில் பட்டாலும் அது கருகி விடும் வரம் பெற்றிருந்தான்,அவன் மேலே சென்றபோது, அதன் நிழல் கண்ணனின் மீதும்...அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது.பசுக்கள் துன்பம் அடைந்தன.மன்னன் செருக்கை அடக்க நினைத்த கண்ணன், அவன் தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார்.மன்னனின் தேர் கீழே அழுத்தியது.அத்துடன் அவன் ஆணவமும் அழிந்தது.இதனால்தான் இத்தலம் தேரெழுந்தூர் ஆனது.

ஒருமுறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும், வைரமுடியையும் கொடுத்து 108 திருப்பதிகளுக்குள் எந்த பெருமாளுக்காவது உகந்ததாக அதைக் கொடுத்துவிடு என்றார்.அதன்படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைரமுடியைக் கொடுத்துவிட்டு...தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு விமானத்தைக் கொடுத்தார் கருடன்.அதனால் இங்குள்ள விமானம் கருடவிமானம் ஆயிற்று.அத்துடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது.(பெரும்பாலான கோயில்களில் கருடன் சந்நிதி பெருமாளின் எதிரில் இருக்கும்)

இக்கோயிலின் மூலவர் தேவாதிராஜன்
உற்சவர்- ஆமருவியப்பன்
தாயார் செங்கமலவல்லி
தீர்த்தம், தர்சன புஷ்கரணி, காவிரி

Thursday, June 2, 2016

9 - ஆதனூர்

                               
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது இக்கோயில்.

பாற்கடலில் சயனித்திருந்த பெருமாளை சந்திக்க வந்த பிருகு முனிவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றை தந்தார்.பிருகு முனிவர் அம்மாலையை இந்திரனுக்குத் தர, அவனோ அதை தன் யானை ஐராவதத்தின் மீது வைக்க...அந்த மாலையை அது தூக்கி வீசியது.இதனால் கோபமடைந்த முனிவர், இந்திரனை பூமியில் மனித்னாகப் பிறக்க சபித்துவிடுகிறார்.தன் சாபம் நீங்க, மகாலட்சுமையை இந்திரன் வேண்ட, பூலோகத்தில் பிருகு முனிவரின் மகளாகத் தான் அவதரிக்கப் போவதாகவும், அந்த அவதாரத்தில் புருமாளுடன் தனக்கு நடக்கும் திருமணத்தை இந்திரன் காணுகையில் சாபம் நீங்கும் என்றும் கூறுகிறாள்.இப்படியாக இந்திரன் சாபம் நீங்குவதாக மரபு வழி வரலாறு உண்டு.

இத்தலத்தின் சிறப்பு என்னவெனில்...

ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதருக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதாம்.அவர் பெருமானை வேண்ட, அவர் கனவில் தோன்றிய பெருமான், கொள்ளிடக்கரையில் வந்து பணம் பெற்றுக் கொள்ளும்படிக் கூறினார்..திருமங்கையாழ்வாரும் கொள்ளிடக் கரைக்கு வந்தார்.அங்கு, தலைப்பாகையுடன் ஒரு வணிகரை சந்தித்தார்,.அவ்வணிகரிடம் ஒரு காலி மரக்கால், ஏடு, எழுத்தாணி இருந்தது.

அவர், ஆழ்வாரிடம், இறைவன் அவருக்கு உதவ தன்னை அனுப்பியதாகக் கூறி...பணியாளர்களுக்குக் கூலியாக அக்காலி மரக்காலில் மணலை அளந்து கொடுத்தால், உண்மையாய் உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், உழைக்காமல் ஏமாற்றியவருக்கு மணலாகவும் தோன்றும் என்றார்.

அவ்வாறே..ஆழ்வார் மரக்காலில் மணலை அளந்து கொடுத்த போது சிலருக்கு பொன்னாகவும், சிலருக்கு மணலாகவுமே இருந்தது.மணலைப் பெற்றவர்கள் அடிக்க வர...வணிகரும் ஓட...ஆழ்வாரும் அவர் பின்னால் ஓடினார்.வணிகர் இத்தலத்தில் வந்து நின்று, வணிகராக வந்தது தானே என பெருமான் உணர்த்தி ., எழுத்தாணியால் ஏட்டில் எழுதி ஆழ்வாருக்கு உபதேசித்தருளினார்.

இதனைக் குறிக்கும் விதமாக, இத்தலப் பெருமாள் மரக்காலை தலைக்குக் கீழ் வைத்து, ஏடு, எழுத்தாணியைக் கையில் கொண்டவாறு பள்ளிக் கொண்டக் கோலத்தில் உள்ளார்.

இலங்கை செல்லும் முன் ஸ்ரீராமனும், ஆஞ்சநேயரும் இங்கு வந்துத் தங்கி சென்ற இடமுமாகக் கூறப்படுகிறது.

இத்தலத்தில் பள்ளிக்கொண்டக் கோலத்தில் காட்சித் தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளிக்கும் ஐயன் என அழைக்கப் படுகிறார்.கருவறையில் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூ தேவியுடன் தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ பள்ளிக்கொண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.மரக்காலைத் தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணியும்..ஏடும் கொண்டுள்ளதால் பெருமானின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாக படுத்துக் கொண்டக் கோலம் என அழைக்கப் படுகிறது.

இக்கோயிலில் அரங்கனின் நாயகி தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார்.

இத்தலத்தில் மகாவிஷ்ணு நோக்கி காமதேனு தவம் இருந்தது.அதனால்,ஆதனூர் என்று பெயர். (ஆ...தன்..ஊர்)

மூன்று நிலை ராஜகோபுரத்தையுடைய இக்கோயிலில், காமதேனுவிற்கும், காமதேனுவின் மகள் நந்தினிக்கும் பெருமாளின் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.

பரமபதத்தில் மாகாவிஷ்ணுவின் முன்பாக இரு தூண்கள் இருக்கும்.மனித உடலில் இருந்து ஆன்மா இவ்விரு தூண்களையும் தழுவ மோட்சம் பெறும் என்பது ஐதீகம்.அதுபோன்று இரு தூண்கள் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் உள்ள அர்த்த மண்டபத்தில் பெருமாளின் பாதம் மற்றும் தலைக்கு எதிரில் உள்ளன.

இரட்டைப்பட எண்ணிக்கையில்  வலம் வந்து, இத்தூண்களைப் பற்றிக் கொண்டு, பெருமாளின் பாதத்தையும்,திருமுகத்தையும் தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இக்கோயிலுக்கான த்னிப் பாசுரம் ஏதும் இல்லை.திருமங்கையாழ்வார் திருமடலில் ஒருவரியில் இக்கோயிலைக் குறிப்பிட்டுள்ளார்

முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளிக்கும் ஐயனை

என் கிறார்.

தல விருட்சம் பாடலி மரம்.தீர்த்தம்- surya புஷ்கரணி, தாமரைத் தடாகம்